ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 • Share this:
  டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் முதலாவதாக மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதைத்தொடர்ந்து, மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, வெண்கலம் வென்றார்.

  தொடர்ந்து, பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார். அதைத்தொடர்ந்து, இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வெண்கல பதக்கம் வென்றது. இதையடுத்து, இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4 ஆக இருந்தது

  இதனிடையே, மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூருளிஸ்லாம் சனாயேவை எதிர்த்து விளையாடினார். இதில் கஜகிஸ்தான் வீரரை பின் முறையில் தோற்கடித்து ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரவிக்குமார் தாஹியா ரஷ்யாவின் உகுயேவை எதிர்த்து விளையாடினார். இதில் 7-4 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் வென்றார். இதனால் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

  இதையடுத்து, சுஷில் குமாருக்கு பிறகு மல்யுத்த விளையாடில் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் ரவிக்குமார் பெற்றுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: