• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவி தாகியா, தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவி தாகியா, தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம்

மல்யுத்தம் காலிறுதியில் இந்திய வீரர்கள்.

மல்யுத்தம் காலிறுதியில் இந்திய வீரர்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ரவி தாகியா, தீபக் புனியா ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

    தீபக் புனியா நைஜீரியா வீரர் எகிரிகெரினியை 12-1 என்று ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். 86கிலோ எடைப்பிரிவு காலிறுதிக்கு இவர் தகுதி பெற்றது டெக்னிக்கல் சுப்பீரியாரிட்டி அடிப்படையில்.

    அதே போல் ரவிகுமார் தாகியாவும் கொலம்பிய வீரர் டைகரஸ் அர்பேனோவை 13-2 என்று வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார், ஆனால் அன்ஷு மாலிக் தோல்வியுற்றார். ஆனால் அன்ஷு மாலிக்கிக்கிற்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது.

    Also Read: டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா

    எப்படியெனில் இவரை எதிர்த்து ஆடிய குரக்கினா என்பவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினால் இவருக்கு ரெபஜா சுற்றில் வாய்ப்புள்ளது.

    ரெபஜா என்பது டென்னிஸில் வைல்டு கார்டு நுழைவு என்பார்களே அது போன்றது.

    அடுத்ததாக தீபக் புனியா சீனாவின் சூஷென் லின் என்பவரை சந்திக்கிறார். இருவருமே முந்தைய சுற்றில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    மற்ற போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லாஃப்லின் உலகச் சாதனை படைத்து தங்கம் வென்றார். 51.46 விநாடிகளில் இவர் இலக்கை எட்டி சாதனை படைத்து தன் சாதனையையே முறியடித்து தங்கம் வென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சக அமெரிக்க வீராங்கனை டேலிலா முகமட் என்பவர் வெள்ளி வென்றார். ஹாலந்து வீராங்கனை ஃபெம்கே போல் வெண்கலம் வென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: