13 வயதில் ஒலிம்பிக் தங்கம் வென்று ஜப்பான் வீராங்கனை சாதனை- அதிசய வரலாறு படைத்த மோமிஜி நிஷியா

13 வயதில் தங்கம் வென்ற ஜப்பான் வீராங்கனை நிஷியா தன் பயிற்சியாளருடன்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானின் இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று 13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

  மோமிஜி நிஷியாதான் சிறு வயதில் தங்கம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை. 13 வயதில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றதே ஒரு உலக சாதனை, இதில் தங்கம் வென்று மேலும் சாதனை வரலாறு படைத்துள்ளதோடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

  ஜப்பானின் ஸ்கேட்போர்டிங் பிரிவில் முதல் தங்கப் பதக்கமாகும் இது. ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த மோமிஜி நிஷியா மற்றொரு 13 வயது வீராங்கனையான ராய்சா லீல் என்பவரை வென்றார்.

  இதையும் படிங்க: Tokyo Olympics | தங்கம் வென்று கெத்து காட்டிய தீஸ்திரியா க்ராஸ்னிக்.. கொண்டாட்டத்தில் கொசவோ

  நிஷியா எடுத்த ஸ்கோர் 15.26. மற்றொரு ஜப்பான் வீராங்கனையான ஃபியூனா நகயாமா 14.49 என்ற ஸ்கோர் எடுத்து வெண்கலம் வென்றார். நிஷியாவிடம் தோல்வி கண்ட லீல் 14.64 என்ற ஸ்கோர் எடுத்து வெள்ளி வென்றார், ஒரு ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று ஜப்பான் சாதனை படைத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: Tokyo Olympics| ஒலிம்பிக்கில் வெற்றியுடன் தடம்பதித்த பவானி தேவி உலக நம்பர் 3 வீராங்கனையிடம் தோல்வி
   இதற்கு முன்னால் பார்சிலோனாவில் 14 வயதில் ஜப்பான் வீராங்கனை கியோகோ இவாசாகி நீச்சல் தங்கம் வென்றதே இளம் வீராங்கனையின் தங்கப்பதக்க சாதனையாகும்.

  ஆடவர் போட்டியிலும் இதே ஜப்பான் வீரர் யூட்டோ ஹோரிகோம் இந்த விளையாட்டின் முதல் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதையடுத்து இப்போது மோமிஜி நிஷாயா தங்கம் வென்ற 13 வயது வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
  Published by:Muthukumar
  First published: