டோக்கியோ ஒலிம்பிக் : பி.வி. சிந்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

கோப்புப் படம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டனில் பி.வி.சிந்து மட்டுமே இதுவரை பதக்க நம்பிக்கை அளித்து வருகிறார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச் ஃபெல்டிட்டை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள சிந்து 13ஆவது இடத்திலுள்ள பிளிச்ஃபெல்டிட்டை ஏற்கெனவே 4 முறை வீழ்த்தியிருக்கிறார்.

  இன்றைய போட்டியில் தொடக்கம் முதல் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் கேமில் வேகமாக 11 புள்ளிகளை எடுத்தார். 22 நிமிடங்களில் முதல் கேமை பி.வி.சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார்.  இரண்டாவது கேமிலும் முதல் கேமை போல் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். இதன்மூலம் காலிறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறியுள்ளார்.

  டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டனில் பி.வி.சிந்து மட்டுமே இதுவரை பதக்க நம்பிக்கை அளித்து வருகிறார்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: