உலகமே உற்று நோக்கும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், தடகளப் பிரிவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜுவ், தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக இன்று நடைபெற்ற கலப்பு 4×400 தொடர் ஓட்டத்தில் திருச்சி மாவட்டம் கும்பகுடி கிராமத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேசன் பங்கேற்றார்.ஒலிம்பிக்கில் முதல் முறையாக 4×400 தொடர் ஓட்டம் இடம் பெற்றுள்ள நிலையில், தனது 21வது வயதில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார் சுபா.
ஒலிம்பிக் களத்தில் சக வீராங்கனை மதுரை ரேவதியுடன் ஓடினார். ஆனால், கடுமையாக முயற்சித்தும் தகுதிச் சுற்றில் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெளியேறியுள்ளது. அதே நேரத்தில் ஓலிம்பிக் ஓடுதளத்தில் சுபா ஓடுவதை திருச்சி மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களில் பலரும் ஆர்வமுடன் தொலைக்காட்சியில் கண்டனர். சுபாவின் இலத்தில் அம்மா, அக்கா, சகோதரர், உறவினர் என உணர்ச்சிப் பெருக்கில் பார்த்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்து உற்சாகப்படுத்துவது போல், உணர்வால் கைதட்டி, கத்தி உற்சாகப்படுத்தினர். வீட்டிலும் கோயிலிலும் பிரார்த்தனை செய்தனர்.
ஒலிம்பிக்கில் தன் மகள் பங்கேற்றது குறித்து சுபாவின் தாயார் பூங்கொடி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தோம், நூலிழையில் வெற்றி வாய்ப்பு தவறினாலும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வார் என்று நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.