• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics: ஒலிம்பிக்- இரண்டு முக்கிய போட்டிகளில் இன்று பங்கேற்கும் இந்தியா!

Tokyo Olympics: ஒலிம்பிக்- இரண்டு முக்கிய போட்டிகளில் இன்று பங்கேற்கும் இந்தியா!

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

பெண்களுக்கான 69 கிலோ  எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் லவ்லினா போரோகைன் தனது ஆக்ரோசத்தை வெளிக்காட்ட காத்திருக்கிறார்.

  • Share this:
    இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டினாவுடன் அரையிறுதியில்  இன்று மோதவுள்ள நிலையில், இந்த ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற இன்னும் 4 தினங்களே உள்ளன. இதுவரை இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில்  பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது. எனினும், வெண்கலப் பதக்கத்துக்கான வாய்ப்பும் இந்திய ஹாக்கி அணி வசம் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இந்நிலையில், இன்றைய தினம் பல்வேறு  போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். தடகளப் போட்டியில் ஆண்கள் ஈட்டி எரிதல் தகுதி சுற்றில் இந்தியாவின் நிராஜ் சோப்ரா தனது திறமையை வெளிகாட்டவுள்ளார்.  பெண்களுக்காக கோல்ஃப் விளையாட்டின் முதல் சுற்றில் இந்தியாவின் அதிதீ அசோக் திறமையை வெளிப்படுத்தவுள்ளார்.

    ஆண்களுக்கான ஈட்டி எரிதல் தகுதிச் சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள சிவ்பால் சிங் தனது திறமையை வெளிப்படுத்த உள்ளார்.  இதேபோல்,  பெண்களுக்கான கோல்ஃப் விளையாட்டின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை தீக்‌ஷா தாகர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தவுள்ளார்.

    இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் திரும்பி பார்க்கவைத்த வெற்றிகளும் அதிர்ச்சியளித்த தோல்விகளும்!


    ஆண்களுக்காக 57 கிலோ எடைப் பிரிவு  மல்யுத்த போட்டியில்  ரவி தாஹியா பங்கேற்கவுள்ளார். பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவு  மல்யுத்த போட்டியில்   அன்ஷு மாலிக் தனது ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்.

    ஆண்களுக்காக 86 கிலோ எடைப் பிரிவு  மல்யுத்த போட்டியில்   இந்தியாவின் தீபக் புனியா தனது திறமையை வெளிப்படுத்தவுள்ளார். பெண்களுக்கான 69 கிலோ  எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் லவ்லினா போரோகைன் தனது ஆக்ரோசத்தை வெளிக்காட்ட காத்திருக்கிறார்.

    மேலும் படிக்க: சவிதா பூனியா; ஆஸ்திரேலியாவின் கனவுகளை முறியடித்த புதிய சுவர்!


    மற்றொரு முக்கிய ஆட்டமாக, இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிப் போட்டியில் அர்ஜண்டினா அணியுடன் இன்று மோதவுள்ளது.  மொத்தல் 9 பிரிவுகளின் இன்று இந்திய அணி களம் காண்கிறது. மல்யுத்த போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் மேற்கொண்டு 3 போட்டிகளில் இந்திய அணி விளையாடக் கூடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: