• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics 2020: டோமினிகா வீராங்கனையை எளிதில் வீழ்த்திய மேரி கோம்!

Tokyo Olympics 2020: டோமினிகா வீராங்கனையை எளிதில் வீழ்த்திய மேரி கோம்!

மேரி கோம்

மேரி கோம்

யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் தற்போது மூன்றாம் ரேங்கில் உள்ளவருமான கொலம்பியாவைச் சேர்ந்த இங்க்ரிட் வேலன்சியாவை  மேரி கோம் அடுத்த ஆட்டத்தில் சந்திக்க உள்ளார்.

  • Share this:
    மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் எளிதில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவு ஃபிளைவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம் களமாடினார். இவர், முதல் சுற்றில் டொமினிகா வீராங்கனை கார்சியாவுடன் மோதினார். தொடக்கம் முதலே மேரி கோம் ஆக்ரோஷமாக விளையாடினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில், இந்தியாவின் இரும்பு மங்கையின் குத்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கார்சியா நிலைகுலைந்தார். இதனால், 4-1 என்ற விகிதத்தில் மேரி கோம் அபார வெற்றிபெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இதில்,  ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் தற்போது மூன்றாம் ரேங்கில் உள்ளவருமான கொலம்பியாவைச் சேர்ந்த இங்க்ரிட் வேலன்சியாவை  மேரி கோம் சந்திக்க உள்ளார்.

    இதையும் படிங்க: டோக்யோ ஒலிம்பிக்: அதிர்ச்சியளித்த இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள்!


    ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் நபர்களில் ஒருவராக மேரி கோம் உள்ளார். உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு மட்டுமல்லாது  தொடர்ச்சியாக 5 முறை தங்கப் பதக்கத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தவர். கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வென்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: