• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics 2020: அதிர்ச்சியளித்த இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள்!

Tokyo Olympics 2020: அதிர்ச்சியளித்த இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள்!

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளவராக கணிக்கப்பட்ட மானு பாக்கர் மற்றும் யஷஸ்வினி ஆகியோர் முதல் சுற்றிலேயே வெளியேறினர். இன்றைய நாள் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்ற நாளாக அமையவில்லை என்பதே உண்மை.

  • Share this:
    டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தனர்.

    அண்மையில் நடைபெற்ற உலகச் சாம்பியன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்தனர். இதனால், டோக்யோ ஒலிம்பிக்கில் சாதிப்பார்கள் என கணிக்கப்பட்டது. ஆனால், முன்னணி வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து  பதக்க வாய்ப்பை இழந்து வருகின்றனர்.

    மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனைகளான மானு பாக்கர் மற்றும் யஷஸ்வினி களம் கண்டனர். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளவராக கணிக்கப்பட்ட இவர்கள் தகுதிச் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர். இருவரும் தகுதிச் சுற்றில் முறையே 12 மற்றும் 13-வது இடங்களையே பிடித்தனர். முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், தகுதிச் சுற்றோடு இந்திய வீராங்கனைகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தீபக் குமார் மற்றும் திவ்யான்ஸ் சிங் விளையாடினர். இவர்கள், தகுதிச் சுற்றில் இலக்கை நோக்கி துல்லியமாக சுடத் தவறியதால் பின்னடைவை சந்தித்தனர். இதனால், தீபக் குமார் 26 இடமும், திவ்யான்ஸ் சிங் 32 வது இடமும் பிடித்து, தகுதிச்சுற்று போட்டியோடு வெளியேறினர்.

    மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா இணை, உக்ரைனின் கிசோனோக் சகோதரிகளை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை 6-0 என எளிதாக கைப்பற்றிய சானியா இணை, 2-வது செட்டை 6-7 என தவறவிட்டது. வெற்றியை தீர்மானிக்கும் டைபிரேக்கர் சுற்றை 8-10 என கடும் போட்டிக்கு பின் இழந்த சானியா இணை, முதல் சுற்றோடு ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.

    இதையும் படிங்க: மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார், இதயங்களையும் வென்றார்!


    இதற்கிடையில், ஆடவர் டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன், இரண்டாவது சுற்றில் ஹாங்காங் வீரர் சியூ ஹங் லாம்-வுடன் மோதினார். 7 செட்களை கொண்ட இப்போட்டியில் முதல் செட்டை ஹாங்காங் வீரர் தனதாக்கினார். இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய சத்தியன் அடுத்த 3 செட்களை வசப்படுத்தி அசத்தினர். பின்னர், சற்று தடுமாறியதால் 5 மற்றும் 6-வது செட்டை இழந்தார். இதனால் வெற்றியை தீர்மானிக்க கூடிய 7-வது செட்டில் விறுவிறுப்பு கூடியது. ஆனால், அந்த செட்டை சியூ ஹங் வென்றார். இதனால், 4-3 என அவர் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சத்தியன் இரண்டாது சுற்றோடு வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    First published: