• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்று சாதனை

வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்று சாதனை

இந்திய ஹாக்கி அணி 41ஆண்டுகளுக்குப் பிற்கு வெண்கலம் வென்று சாதனை.

இந்திய ஹாக்கி அணி 41ஆண்டுகளுக்குப் பிற்கு வெண்கலம் வென்று சாதனை.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

    1-3 என்று பின்னடைவு கண்டிருந்த இந்திய ஹாக்கி அணி பெரிய அளவில் எழுச்சி கண்டு 5-4 என்று அபார வெற்றி பெற்று 41 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு ஹாக்கியில் மீண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

    மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, அந்த ஷாட்டை ஸ்ரீஜேஷ் அபாரமாகத் தடுக்க இந்தியா அபார வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

    1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பாஸ்கர் தலைமையில் இந்தியா கடைசியில் தங்கம் வென்றது இப்போது 2020 டோக்கியோ ஒலிம்பிகில் ஹர்மன்பிரீத் தலைமையில் வெண்கலம் வென்று சாதனை படைத்தது.

    இந்தியா தரப்பில் 17வது நிமிடத்தில் சிம்ரன் ஜித் சிங் முதல் கோலை அடித்தார். பிறகு ஜெர்மனி 2 கோல்களை அடித்து 3-1 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு 27வது நிமிடத்தில் ஹர்திக், 29வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத், 31-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங், 34வது நிமிடத்தில் மீண்டும் சிம்ரன் ஜித் சிங் 5வது கோலை அடித்தார்.

    அதன் பிறகு ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. பிறகு ஜெர்மனி தாக்குதலை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தலைமையில் வெற்றிகரமாகத் தடுத்து வரலாறு படைத்தது. இந்தியாவுக்கு 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம். ஜெர்மனியை 5-4 என்று வீழ்த்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: