Bajrang Punia : இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா

கோப்புப் படம்

  2019ம் ஆண்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் தவ்லத் நியாஸ்பகோவிடம் பஜ்ரங் புனியா தோல்வியடைந்திருந்தார். அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பஜ்ரங் புனியாவின் ஆட்டம் இருந்தது.

  • Share this:
    டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவு போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அஜர்பெய்ஜான் வீரர் ஹாஜி அலியேவ்விடம் தோல்வியுற்றார்.  இதையடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் தவ்லத் நியாஸ்பகோவிடம் மோதினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஏற்கனவே, கடந்த  2019ம் ஆண்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில் தவ்லத் நியாஸ்பகோவிடம் பஜ்ரங் புனியா தோல்வியடைந்திருந்தார். அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பஜ்ரங் புனியாவின் ஆட்டம் இருந்தது.  தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பஜ்ரங் புனியா இறுதியில் 8-0 என்ற கணக்கில் தவ்லத் நியாஸ்பகோவியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

    இதையும் படிங்க: ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..


    இதன் மூலம் 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கம் என இதுவரை 6 பதக்கங்களை இந்திய அணி பெற்றுள்ளது.  கடந்த 2012ம் ஆண்டு  லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 6 விருதுகளை பெற்றிருந்தே இந்தியாவின் சிறப்பான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. பஜ்ரங் புனியா பெற்றுள்ள வெண்கலப் பதக்கம் மூலம் தற்போது அதனை இந்திய அணி சமன் செய்துள்ளது.  ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 6வது மல்யுத்த வீரர் என்ற சிறப்பையும் பஜ்ரன் புனியா பெற்றுள்ளார்.

    மேலும் படிக்க: ஒலிம்பிக் கோல்ஃப் : பதக்க வாய்ப்பை தவறவிட்டாலும் சாதனை படைத்த அதிதி அசோக்


    2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 7 மல்யுத்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் மூன்று பேர் பக்கம் வெல்லும் போட்டிக்கு முன்னேற்றினர். இதில், ரவி தாஹியா வெள்ளியும், பஜ்ரன் புனியா வெண்கலமும் வென்றுள்ளனர்.  தீபக் புனியா வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் வெற்றியை பறிகொடுத்தார்.
    Published by:Murugesh M
    First published: