மல்யுத்தம் ரெபஷாஜ் சுற்று: அன்ஷு மாலிக் தோல்வி- வெண்கல வாய்ப்பு நழுவியது

19 வயது மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக்.

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தம் 57 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீஸ்டைல் ரெபஷாஜ் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்தார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தம் 57 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீஸ்டைல் ரெபஷாஜ் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக் தோல்வி அடைந்தார்.

  ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை வலேரியா கோப்லோவா என்பவரிடம் அன்ஷு மாலிக் 1-5 என்று தோல்வி தழுவினார்.

  இதில் வெற்றி பெற்றிருந்தால் அன்ஷு மாலிக் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு முன்னேறியிருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 19 வயது அன்ஷு மாலிக் ரெபஷாஜ் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

  அறிமுக ஒலிம்பிக் போட்டிகளில் ஆடும் அன்ஷு மாலிக் இவ்வளவு தூரம் முன்னெறி வந்து ரெபஷாஜ் சுற்று வரை வந்து வெண்கல வாய்ப்பு வரை நீடித்தது பெரிய விஷயம்தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இருப்பினும் ரவிகுமார் தாகியா இன்று மாலை இறுதிப் போட்டியில் மோதுகிறார் அவருக்கு நிச்சயம் வெள்ளி உறுதியாகி விட்டது, ஆனாலும் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  தீபக் புனியாவும் வெண்கலப் போட்டியில் ஆடவிருக்கிறார்.
  Published by:Muthukumar
  First published: