ஒலிம்பிக் ஆடவர் ஒற்யைர் வில்வித்தை : அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தையசுற்றுக்கு தகுதி

அதானு தாஸ்

துல்லியமாக அம்பெய்திய அதானு 10 புள்ளிகளை வசப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தையில் இந்தியாவின் அதானு தாஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்யைர் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ் பங்கேற்று உள்ளார். அவர் முதல் சுற்றில் சீன தைபே அணியின் செங்கை எதிர்த்து விளையாடினார். அதில் 6-4 என்ற கணக்கில் அடானு தாஸ் வென்றார்.

  Also Read : டோக்கியோ ஒலிம்பிக் : பி.வி. சிந்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

  இந்நிலையில் இரண்டாவது சுற்றில் அடானு தாஸ் தென்கொரிய வீரர் ஜின்ஹெக்கை எதிர்த்து விளையாடினார். இரு வீரர்களும் செட்களை மாற்றி மாற்றி வெற்றி பெற்றனர். 5 சுற்றுகள் கொண்ட போட்டியில் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி சுற்றிலும் இருவரும் அபாரமாக விளையாடி தலா 28 புள்ளிகள் பெற்றறனர்.

  Also Read : ஆடவர் குத்துச்சண்டையில் சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்

  இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் போட்டி நடத்தப்பட்டது. இதில் முதலில் அம்பு விட்ட தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் எடுத்தார். துல்லியமாக அம்பெய்திய அதானு 10 புள்ளிகளை வசப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்த தீபிகா குமாரி, கணவர் அதானு தாஸை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: