2-1 ஆதிக்கத்துக்குப் பிறகு தோற்றது ஏன்?- இந்திய ஹாக்கி கோச் கிரகாம் ரீட் என்ன கூறுகிறார்?

பயிற்சியாளர் கிரகாம் ரீட்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் உலக சாம்பியன் பெல்ஜியத்திடம் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றது ஏன் என்று இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரகாம் ரீட் விளக்கியுள்ளார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் உலக சாம்பியன் பெல்ஜியத்திடம் இந்திய அணி 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றது ஏன் என்று இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரகாம் ரீட் விளக்கியுள்ளார்.

  ஆட்டம் தொடங்கி முதல் 15 நிமிடங்களில் இந்திய அணி 2 கோல்களை அடித்து ஆதிக்கம் செலுத்தியது, அதாவது பெல்ஜியம் முதல் பெனால்டி கார்னரை கோலாக மாற்ற இந்திய அணி அதன் பிறகு பெனால்டி கார்னரில் ஒருகோலையும் பிறகு மந்தீப் சிங் பீல்ட் கோலையும் அடித்து 2-1 என்று ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் நீண்ட நேரம் 2-2 என்றே சென்று கொண்டிருந்தது.

  கடைசி 15 நிமிடங்களில் பெல்ஜியம் கொடுத்த நெருக்கடியில் டி-சர்க்கிளுக்குள் இந்திய அணி ஏகப்பட்ட தவறுகளை இழைக்க பெனால்டி கார்னர் மழை பொழிந்தது பெல்ஜியம் சார்பில், இதில் உலகின் தலைசிறந்த பெனால்டி ஸ்ட்ரைக்கர் அலெக்சாண்டர் ஹென்றிக்ஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தார், இந்திய அணி ஹர்மன்பிரீத் சிங்கை கடைசி நேரத்தில் இழந்தது, பச்சை அட்டை காட்டபட்டு பெஞ்சுக்கு அனுப்பப்பட ஆட்டம் தலைகீழாக மாறிப்போனது.

  இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரகாம் ரீட் தோல்வி ஏன் என்று கூறிய விளக்கத்தில், “ஆட்டத்தை வெல்ல போதிய வாய்ப்புகளை உருவாக்கினோம். ஆனால் பெல்ஜியம் எப்போதும் திருப்பித் தாக்கும் அணி, அவர்கள் உலக சாம்பியன்கள், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அணிகளுடன் உத்வேகத்தை விட்டு விடக் கூடாது.

  தொடர்ந்து கோல் நோக்கி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்தால்தான் அந்த அணிகளை நெருக்கடியில் வைக்க முடியும். ஸ்கோர் போர்டு பிரஷரை கொடுக்க தவறினோம்.

  குறிப்பாக எதிரணி 10 வீரர்களுடன் தான் ஆடுகிறது என்ற தருணம் கிடைத்தால் இந்த அணிகள் நம் மீது பாய்ந்து விடும். அந்த கிரீன் கார்டு ஆட்டத்தைப் புரட்டிப் போட்டது. அது நடந்த பிறகுதான் அவர்கள் கோல்களை அடித்தனர்.

  அதைப்பற்றி இப்போது பேசி பயனில்லை. ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் ஜெர்மனியாக இருந்தாலும் ஒரு பழிதீர்ப்பு பாக்கியிருக்கிறது. 3வது சிறந்த அணியாகத் திகழ உண்மையில் சிறப்பாக ஆட வேண்டும். வெண்கலப்பதக்கப் போட்டிக்கு தயார்படுத்தி வருகிறோம். தலைநிமிர்ந்து ஆடி வெண்கலப்பதக்கத்தை வெல்ல வேண்டும் அதுதான் என் அணுகுமுறை” என்றார்.
  Published by:Muthukumar
  First published: