Tokyo Olympics Mirabai Chanu| வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு: டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் வெள்ளி பதக்கம்

ஒலிம்பிக் வெள்ளி வென்று சாதனை படைத்த மீராபாய் சானு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார் பளுத்தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார் பளுத்தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்று தந்தார் மீராபாய் சானு. கரணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் வென்ற 2வது வீரான்ஙனையானார் மீராபாய் சானு.

    சானு 87 கிலோ, 84 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கினார். ஆனால் 89 கிலோ எடையை தூக்க முடியவில்லை. இதனையடுத்து வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    Must Read: Tokyo Olympics Mirabai Chanu| மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார், இதயங்களையும் வென்றார்!

    சீனாவின் ஹூ ஷிஹு 94 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். இது ஒலிம்பிக் வரலாற்றுச் சாதனையாகும். இந்தோனேசியாவுக்கு வெண்கலம்.

    87 கிலோ எடைத் தூக்கி மீராபாய் சானு தன் சொந்த சாதனையையே சமன் செய்தார். 2017-ல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற போது இதே 87 கிலோதான் தூக்கினார். மொத்தம் 202 கிலோ தூக்கினார் மீராபாய் சானு.

    மொத்தமாக சீன வீராங்கனை ஹூ ஷிஹூ 210 கிலோ தூக்கி தங்கம் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    5 ஆண்டுகளுக்கு முன்பாக ரியோவில் மீராபாய் சானு கடும் ஏமாற்றமளித்தார், ஆனால் அதன் பிறகு கடுமையாக உழைத்து நாட்டுக்காக இப்போது ஒலிம்பிக் வெள்ளி வென்று வரலாறு படைத்துள்ளார். 2021 ஆசிய வெய்ட்லிப்டிங்கில் 119 கிலோ எடைத்தூக்கினார் மீராபாய். இது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இது கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவின் தங்கப் பதக்கம் ஆகும்.

    இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    Published by:Muthukumar
    First published: