• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா காலிறுதிச் சுற்றில், சீமா பிஸ்லா ஏமாற்றம்

ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா காலிறுதிச் சுற்றில், சீமா பிஸ்லா ஏமாற்றம்

பஜ்ரங் புனியா

பஜ்ரங் புனியா

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற மற்றொரு வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வி தழுவி வெளியேறினார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற மற்றொரு வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வி தழுவி வெளியேறினார்.

    50 கிலோ எடைப்பிரிவு ஃப்ரீ ஸ்டலில் டியுனிசியா வீராங்கனை சாரா ஹம்டியை எதிர்கொண்ட சீமா பிஸ்லா 3-1 என்று தோல்வி தழுவி வெளியேறினார்.

    மாறாக ஆடவர் மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா - அக்மாதிலீவ் இடையே 65 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீ ஸ்டைல் போட்டி நடைபெற்றது இதில் பஜ்ரங் முதலில் 2 புள்ளிகள் முன்னிலை பெற்று 3-1 என்று இருந்தார்.

    Also Read: Tokyo Olympics| இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி- பிரிட்டனுக்கு வெண்கலம்

    ஆனால் அதன் பிறகு அக்மாதிலீவ் 2 புள்ளிகள் பெற்று சமன் செய்ய ஆட்டம் 3-3 என்று சமன் ஆனது. ஆனால் நடுவர்கள் பஜ்ரங் புனியா வென்றதாக டெக்னிகல் சூப்பிரியாரிட்டி அடிப்படையில் அறிவிக்க அவர் காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டத்தில் ஈரான் வீரர் மோர்டெசா சிகா கியாஸி என்பவரைச் சந்திக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே சீமா பிஸ்லா ரெபஷாஜ் சுற்றுக்கும் தகுதி பெறவில்லை, காரணம் இவரை வென்ற டுனிசியா வீராங்கனை தன் அடுத்த போட்டியில் தோல்வி தழுவினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: