Tokyo Olympics | 10மீ ஏர்பிஸ்டல் இறுதிக்கு இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி தகுதி- பதக்கம் வெல்ல வாய்ப்பு

சவுரவ் சவுத்ரி.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தகுதி பெற்றார், ஆனால் மற்றொரு வீரர் அபிஷேக் வெளியேறினார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 10 மீ ஏர்பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தகுதி பெற்றார், ஆனால் மற்றொரு வீரர் அபிஷேக் வெளியேறினார்.

    உலகின் நம்பர் 2 வீரரான சவுரவ் சவுத்ரி 6 சீரீஸில் 586 ஷாட்களுடன் 8-ம் இடத்தில் முடிந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். முதல் சீரிசில் பிரமாதமாக தொடர்ந்து இலக்குகளை தாக்கினார் சவுரவ். 10 புள்ளிகள் இலக்கை 5 முறையும் 9 புள்ளிகள் இலக்கை 5 முறையும் குறிவைத்து அடித்து 95 புள்ளிகள் பெற்றார். இவர் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்று தருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இறுதிப் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சவுரவ் சவுத்ரி (சீரிஸ் 6 ): 586-28x [10, 10, 10, 10, 10, 10, 9, 9, 9, 10]

    அபிஷேக் (சீரிஸ் 6), - 575-19x [9, 10, 10, 9, 10, 10, 9, 9, 8, 8]

    Read this: Tokyo Olympics| டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி
     Also Read: Tokyo Olympics| இந்தியா அபார வெற்றி: ஹாக்கியில் நியூசிலாந்தை 3-2 என்று வீழ்த்தியது


    சவுரவ் தவிர சீனாவின் ஷாங் போவென், ஜெர்மனியின் ரீட்ஸ், உக்ரைன் வீரர் பாவ்லோவ் கொரோஸ்டைலோவ், பரவ்கி, கொரியாவின் கிம் மொசே, சீனாவின் பாங் வெய், செர்பியாவின் மிகெக், ஆகியோரும் இறுதிக்குத் தகுதி பெற்றனர்.
    Published by:Muthukumar
    First published: