ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Tokyo Olympics| ஒலிம்பிக்கில் வெற்றியுடன் தடம்பதித்த பவானி தேவி உலக நம்பர் 3 வீராங்கனையிடம் தோல்வி

Tokyo Olympics| ஒலிம்பிக்கில் வெற்றியுடன் தடம்பதித்த பவானி தேவி உலக நம்பர் 3 வீராங்கனையிடம் தோல்வி

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி பெற்று தடம்பதித்தார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் பவானி தேவி உலகின் நம்பர் 3 வீராங்கனை மனான் புருனேவிடம் 7-15 என்று போராடித் தோல்வி அடைந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டியில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர். இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால் அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனான் புரூனேவுக்கு பவானி தேவி நல்ல ஃபைட் கொடுத்தார். ஆனாலும் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகளில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்று கலக்கிய அளவில் பவானி தேவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது அடுத்த சுற்றில் தோல்வியடைந்தாலும் அவர் சவால் அளித்த விதத்தில் தெரிந்தது.

2-8 என்று பின் தங்கியிருந்த பவானி தேவி பிறகு 5 புள்ளிகளைப் பெற்றார். பவானிதேவி பிரான்ஸ் வீராங்கனைக்கு சில நெருக்கடிகளைக் கொடுத்தார். ஆனால் அவர் உலக நம்பர் 3 வீராங்கனை, அதனால் அனுபவத்தினால் பவானி தேவியின் சவால்களை முறியடித்து காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் : வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி

வாள்வீச்சில் தடம் பதித்ததன் மூலம் இந்த விளையாட்டை மேலும் பல இளைஞர்கள் எடுத்துக் கொள்ள கிரியா ஊக்கியாகத் திகழ்கிறார் பவானி தேவி.

சென்னையைச் சேர்ந்த பவானி தேவிக்கு வயது 27, இவரது பயிற்சியாளர் இத்தாலியைச் சேர்ந்த நிகோலா சனோட்டியாவார். நிச்சயம் இத்தாலி பயிற்சியாளர் பவானி தேவி ஆட்டத்தில் பெருமை அடைந்திருப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தாலியில் பயிற்சி பெற்று கடினமான பாதையில் பயணித்த பவானி தேவி 2009-ல் முதன் முதலில் வெண்கலம் வென்றார். 2010-ல் ஆசிய வாள்விச்சிலும் பதக்கம் வென்றார்.

2017, 18-ல் ஐஸ்லாந்தில் இருமுறை வாள்வீச்சுப் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

First published:

Tags: Tokyo Olympics