ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தாமஸ் உபெர் கோப்பை பேட்மிண்டன்:43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி

தாமஸ் உபெர் கோப்பை பேட்மிண்டன்:43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி

பிரணாய் வெற்றியினால் அரையிறுதி சாத்தியம்

பிரணாய் வெற்றியினால் அரையிறுதி சாத்தியம்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளில் முதல் முறையாக  தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில்   அரையிறுதியை எட்டியது.

இருப்பினும், தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள இம்பாக்ட் அரினாவில் நடந்த கால் இறுதியில் தாய்லாந்திடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்று உபெர் கோப்பையில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் அணி வெளியேறியது.

பெண்கள் போட்டியில் தாய்லாந்து ஆதிக்கம் செலுத்தியது. 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறியது. இதன் ஒற்றையர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-18, 17-21, 12-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) 59 நிமிடங்களில் வீழ்ந்தார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ருதி மிஸ்ரா-சிம்ரன் சிங்கி ஜோடியும், மற்றொரு ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பும் அடுத்தடுத்து தோல்வி கண்டனர். தாய்லாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதால் அடுத்து நடக்க இருந்த மற்றொரு இரட்டையர், ஒற்றையர் ஆட்டங்களின் முடிவு தேவையில்லாததால் கைவிடப்பட்டன.

கிடாம்பி ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் மற்றும் சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோரின் வெற்றியின் மூலம் மலேசியாவுக்கு எதிரான இந்தியாவின் தாமஸ் கோப்பை கனவு சாத்தியமாகியுள்ளது. உலகின் 9வது இடத்தில் உள்ள ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை வீரரான லக்ஷ்யா சென், உலகின் 6ம் நிலை வீரரான லீ ஜி ஜியாவிடம் தோல்வி அடைய பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் இரண்டாவது போட்டியில் வென்று இந்தியா ஸ்கோரை சமன் செய்ய உதவினார்கள்.

தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்து இளம் வீரரிடமிருந்து கிடாம்பி சவாலை எதிர்கொள்ளவில்லை. ஆனால் இரண்டாவது ஆட்டத்தின் முடிவில் 21-11, 21-17 என வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இருப்பினும், நான்காவது ஆட்டத்தில் மலேசியா வென்று மீண்டும் சமன் செய்தது, கிருஷ்ண பிரசாத் மற்றும் விஷ்ணுவர்தன் பஞ்சாலாவின் இந்திய ஜோடி ஆரோன் சியா மற்றும் தியோ ஈ யி ஆகியோருக்கு எதிராக 19-21, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது,

பரபரப்பான இறுதிப் போட்டியில், இந்திய வீரர் பிரணாய், லியோங் ஜுன் ஹாவுக்கு எதிராக முன்னேறி இந்தியாவை வெற்றி பெறச் செய்தார். மலேசிய வீரர் அழுத்தத்தின் கீழ் சரியாக ஆட முடியவில்லை. பல அறியாத் தவறுகளைச் செய்தார், இதனால் பிரணாய் 21-13, 21-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்தியா 1952, 1955 மற்றும் 1979 ஆகிய மூன்று முறை மட்டுமே தாமஸ் கோப்பையின் அரையிறுதியை எட்டியுள்ளது. கடைசியாக 2020-ல்  காலிறுதியில் வெளியேறியது. இந்த முறை அரையிறுதியில்  தென் கொரியா மற்றும் டென்மார்க் இடையேயான போட்டியில் வெற்றிபெறுபவரை இந்தியா எதிர்கொள்ளும்.

First published:

Tags: Badminton, PV Sindhu