இம் முறை நிச்சயம் பதக்கத்தோடு திரும்பி வருவோம் - ஒலிம்பியன் சரத்கமல்

சரத் கமல்

ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டிக்கு இரண்டு தமிழர்கள் தகுதி பெற்றுள்ளோம் , இம்முறை பதக்கத்தோடு திரும்பி வருவோம் என  டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

  • Share this:
தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற சரத் கமல் மற்றும் சத்தியன் ஞானசேகரன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அத்துடன் தேசிய அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜூனியர், சீனியர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதன் பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த இந்திய டேபிள் டென்னிஸ் வீரரும் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த பத்ம ஸ்ரீ சரத்கமல், இந்த முறை நிச்சயம் பதக்கத்தோடு திரும்பி வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒற்றையர், கலப்பு இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் விளையாடவுள்ளேன். இதுதான் ஸ்பெஷல், மனிகாவுடன் இணைந்து கலப்பு இரட்டையரில் பதக்கம் வெல்வேன் நன நம்பிக்கை உள்ளது.

17 வருடத்திற்கு பிறகு இது சாத்தியமாகவுள்ளது. 2004-ல் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்குள் நுழையும் போது இருந்த கனவு இந்த வருடம் நிறைவேறவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். ஆசிய விளையாட்டுப்போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் உலகின் தலைசிறந்த நாடுகளான ஜப்பான், சீனா போன்ற நாடுகளை வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளோம், இந்த நிகழ்வு ஒலிம்பிக் போட்டியில் நாம் பதக்கம் வெல்லும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

சத்தியன் ஞானசேகரனுடான என்னுடைய பாண்டிங் சிறப்பானதாகவே உள்ளது. அவருடைய அறிவுரையெல்லாம் கேட்டு சில போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். எனவே ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும்  மூன்று வீரர்களும் சிறந்த ஃபார்மில் உள்ளோம்.  மூன்று பேர்களில் ஒருவர் பதக்கத்தோடு திரும்பி வருவோம். 30 வருட டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்த தூரம் கடந்து வந்ததற்கு காரணம் என்னுடைய உடலை சிறப்பாக கவனித்தது தான். டேபிள் டென்னிஸ் மைதானத்தில் இருப்பதை விட ஜிம்மில் இருக்கும் நேரம் தான் அதிகம்.

சக வீரர் சத்தியன் கூட கிண்டல் செய்ததுண்டு அதிக நேரம் உடற்பயிற்சி கூடத்தில் நேரம் செலவிடுவதை. அதன்  பயண் தான் இந்த சாதனைக்கு காரணம். முதல் முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் தமிழகத்திலிருந்து இரண்டு வீரர்கள் ஒரே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த தமிழ்நாடே பெருமையடை கூடிய விஷயமாக பார்க்கிறேன்.

வட இந்திய வீரர்கள் அரசியல் களம் காண்பது போல் ஏன் தமிழ்நாடில் அப்படி யாரும் முன்வருவதில்லை என்ற கேள்விக்கு தமிழகத்தில் அவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லை என்பதே எனது கருத்து. தென் இந்தியாவை பொருத்தவரை வீரர்களுக்கும், அரசியலுக்குமான தொடர்பே கிடையாது. இனி வரக்கூடிய காலங்களில் வீரர்கள் அரசியல் களம் புக வாய்ப்புள்ளதாக தெருவித்தார்.

தமிழக அரசின் விளையாட்டுத்துறை அனைத்து மாநிலங்களுக்குக் முன்மாதிரியாக திகழ்கிறது. தமிழகத்தில் சர்வதேச தரத்தில்  நிறைய மைதானங்கள் உருவாக்க வேண்டும், 1994 ம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச தரத்தில் மைதானம் கட்டப்படுவதில்லை இதை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கைவைப்பதாக தெரிவித்தார்.
Published by:Vijay R
First published: