ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA World Cup 2022 : இது ஆப்பிரிக்காவின் காலம்... உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்து அசத்திய மொராக்கோ!

FIFA World Cup 2022 : இது ஆப்பிரிக்காவின் காலம்... உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்து அசத்திய மொராக்கோ!

மொராக்கோ அணிக்கு குவியும் பாராட்டு

மொராக்கோ அணிக்கு குவியும் பாராட்டு

FIFA World Cup 2022 - மொராக்கோ அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் கடந்த உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaDohaDohaDoha

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகலை வெளியேற்றி, முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து மொராக்கோ அணி சாதித்துள்ளது.

கத்தாரில் கொண்டாடப்படும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக் கட்டத்தை எட்டிள்ளது. தோஹாவில் உள்ள அல்-துமமா மைதானத்தில் நடைபெற காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் - மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

முதல் பாதியின் இறுதிக் கட்டத்தில், மொராக்கோ வீரர் யூசுப் நெசிரி, தலையால் பந்தை முட்டி, கோல் அடித்து மிரட்டினார். இரண்டாவது பாதி தொடங்கிய நிலையில், இந்தப் போட்டியிலும் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாற்று வீரராகவே களமிறக்கப்பட்டார். 51-வது நிமிடத்தில் இவர் இறங்கியதும் போர்ச்சுகல் அணி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

ஆனால், மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பவுநுயூ (BOUNOOU), தடுப்பு அரண் போல் செயல்பட்டு போர்ச்சுகல் அணி வீரர்களின் கோல் முயற்சிகளை முறியடித்தார். கடைசி வரை போராடியும் போர்ச்சுகல் அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், 1-0 என்ற கோல்கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

அத்துடன், உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்றது மொராக்கோ அணி பெற்றுள்ளது. இதற்கு மொராக்கோ, ஆப்பிரிக்கா நாடுகளைத் தாண்டி உலகின் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபல பாப் பாடகி ஷகிரா தனது "This time for africa" என்ற 2012 உலகக் கோப்பை கீதத்தை குறிப்பிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘அவுட் ஆகாமல் இருந்திருந்தால் 300 ரன்கள் அடித்திருப்பேன்’ – இஷான் கிஷன் பேட்டி

அதேபோல், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மொராக்கோ அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் கடந்த உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், காலிறுதியுடன் வெளியேறிய சோகத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ கண்ணீருடன், மைதானத்தில் இருந்து விடைபெற்றார்.

First published:

Tags: FIFA 2022, FIFA World Cup 2022