ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

”ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் இந்த சீசன் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்”- ஃஎப்.எஸ்.டி.எல் தலைவர் நீதா அம்பானி!

”ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் இந்த சீசன் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்”- ஃஎப்.எஸ்.டி.எல் தலைவர் நீதா அம்பானி!

ஃப்.எஸ்.டி.எல் நிறுவனர் நீதா அம்பானி

ஃப்.எஸ்.டி.எல் நிறுவனர் நீதா அம்பானி

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து ஆட்டம் கொச்சியில் இன்று தொடங்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  2022-23ம் ஆண்டிற்கான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து ஆட்டம் கொச்சியில் இன்று தொடங்கிறது. தொடங்கும் சீசன் கால்பந்து விளையாட்டில் ஒரு மைல் கல்லாக திகழப் போகிறது என்று கால்பந்து விளையாட்டு வளர்ச்சி லிமிடெடின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி கூறியுள்ளார்.

  இந்த ஆண்டிற்கான இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் இன்று முதல் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் தொடங்கியுள்ளது. இதில் கடந்த சீசனில் இரண்டாம் இடம்பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் கிழக்கு பெங்கால் FC- யும் மோதிக்கொள்கின்றனர்.

  இந்த சீசன் தொடக்கத்தை குறித்துப் பேசிய கால்பந்து விளையாட்டு வளர்ச்சி லிமிடெடின் நிறுவனரும் தலைவருமான நீதா அம்பானி, இந்தியக் கால்பந்து விளையாட்டின் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 2022-23 சீசன் விளையாட்டுகள் மைல் கல்லாக திகழும் என்று கூறியுள்ளார்.

  மேலும் இரண்டு வருடம் இடைவேளைக்குப் பின்பு அரங்கில் ரசிகர்கள் கூடி உற்சாகமாக இந்த சீசன் விளையாட்டை ரசிக்கவுள்ளனர் என்று கூறியுள்ளார். கால்பந்து விளையாட்டிற்கு ரசிகர்களே உயிராகத் திகழ்கின்றனர். அவர்களின் அணிகளுக்கு ஆரவாரமாக அவர்கள் அரங்கில் அளிக்கும் ஆதரவு பெரும் பங்கு வகிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

  தொடர்ந்து, கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காலத்திலும் இந்தியன் சூப்பர் லீக் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வந்தது. அதே போல் இந்த வருடமும் அதிக அளவில் உள்ளூர் வீரர்களும் தரமான ஆட்டங்களும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  2022-23ம் ஆண்டிற்கான ஹீரோ இந்தியன் சூப்பர் லீக், ரசிகர்களுக்கு நீண்ட கால அனுப்புவதைத் தரவுள்ளது. ரசிகர்கள் நேரடியாக அரங்கிற்குச் சென்று காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

  Also Read : சஞ்சு ஆட்டம் வீண்: த்ரில் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

  இந்தியன் சூப்பர் லீக் போட்டிகள் இந்த ஆண்டு முதல்முறையாக பிளேஆஃப் ஆட்டங்களுக்கு முன்பே 5 மாதங்கள் வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் 20 ஆட்டங்கள் வரை ஆடவுள்ளனர்.

  இன்று தொடங்கும் இந்த ஆட்டத்தின் கடைசி லீக் பிப்ரவரி 26ம் தேதி வரை தொடர்கிறது. அதன் பின்னர் பிளேஆஃப், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மார்ச் 2023 உடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: ISL football, ISL Football League, Nita Ambani