Home /News /sports /

73 ஒற்றையர் பட்டம்.. 4 தங்க பதக்கங்கள்.. 23 கிராண்ட்ஸ்லாம் - "டென்னிஸ் குயின்" செரீனா வில்லியம்ஸ் ஓய்வு

73 ஒற்றையர் பட்டம்.. 4 தங்க பதக்கங்கள்.. 23 கிராண்ட்ஸ்லாம் - "டென்னிஸ் குயின்" செரீனா வில்லியம்ஸ் ஓய்வு

செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ்

27 ஆண்டுகளாக டென்னில் உலகின் முடிசூடா ராணியாக வலம் வந்த செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • internatio, Indianewyorknewyork
    41வயதான செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். அதன்படி நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஜ்லா டோம்லிஜனோவிக்-கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 5-7, 7-6, 1-6 என்ற செட்கள் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.

    இதுவே, செரீனா வில்லியம்ஸ்-சின் கடைசி போட்டியாக அமைந்தது. ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் அவர் டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேறியபோது அனைவரும் எழுந்து நின்றனர். அவர் அனைவரிடமும் விடைபெற்று கையசைத்த போது, 'சிம்ப்லி தி பெஸ்ட்' என்ற பாப் பாடல் அரங்கை அதிர வைத்தது.

    தனது வாழ்க்கையில் வேறு ஒரு பரிணாமத்தை நோக்கி பயணிக்க தயாராக உள்ளதாக செரீனா தெரிவித்தார். தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார்.உலக டென்னிஸ் வராலற்றில் செரீனா வில்லியம்ஸ், தனி சிறப்புடையவர் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    செரீனா வில்லியம்ஸ்


    அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஏராளமானர் செரீனா வில்லியம்ஸ்-சுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மிஷேல் ஒபாமா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சிறிய நகரமான கிராம்டனிலிருந்து, உலக அளவில் மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்ததை பார்க்கும் அதிஷ்டம் தனக்கு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

    1995ஆம் ஆண்டு தனது 14ஆம் வயதில், டென்னிஸ் உலகில் கால்பதித்த செரீனாவுக்கு முதல் போட்டி தோல்வியை தந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அது அவரின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி.

    செரீனா வில்லியம்ஸ்


    செரீனா வில்லியம்ஸ் அதிக வெற்றிகளை குவித்தது விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில்தான். அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் தலா 7 வெற்றிகளை குவித்துள்ளார். புல் தரையில் கலக்கிய அவர், மண் தரையில் விளையாடும் பிரெஞ்ச் ஓபன் போட்டிகளிலும் சளைத்தவர் அல்ல. அதிலும் 3 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். செரீனாவின் தொடக்கமாகவும் இறுதியாகவும் அமைந்த அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடர்களில் 6 முறை வெற்றிவாகை சூடியுள்ளார்.

    2017 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெற்றி பெற்றதே செரீனாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    செரீனா வில்லியம்ஸ்


    2000 சிட்னி ஒலிம்பிக்ஸ் தொடரின் இரட்டையர் போட்டியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து தங்க பதக்கம் வென்றார். பின்னர் 2008 மற்றும் 2012- ஆம் ஆண்டுகளில் ஒற்றையர் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியன், ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் என கோல்டன் ஸ்லாம், பட்டம் பெற்ற நான்கே பேரில் செரீனா வில்லியம்ஸ்-சும் ஒருவர்.

    செரீனாவை விட மார்க்கிரெட் கோர்ட் என்பவர் மட்டுமே அதிக பதக்கங்களை பெற்றுள்ளார். அதுவும் அமெச்சூர் எரா என்றழைக்கப்பட்ட 1968ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் தான். ஒட்டு மொத்தமாக 73 ஒற்றையர் பட்டம், 4 தங்க பதக்கங்கள், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என இமாலாய சாதனையை புரிந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Serena Williams, Tennis, Tennis Star

    அடுத்த செய்தி