ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Thailand Open: உலகின் நம்பர் 1 யாமகுச்சியை 51 நிமிடங்களில் வீழ்த்தி அரையிறுதியில் சிந்து

Thailand Open: உலகின் நம்பர் 1 யாமகுச்சியை 51 நிமிடங்களில் வீழ்த்தி அரையிறுதியில் சிந்து

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை, உலகின் நம்பர் 1 யாமாகுச்சியை இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை, உலகின் நம்பர் 1 யாமாகுச்சியை இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

  சற்று முன் முடிந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து அகானே யாமாகுச்சியை 21-15, 20-22, 21-13 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் சிந்து சென் யூஃபெய்யை சந்திக்கிறார்.

  முதல் செட்டில் இருவரும் 1-1 என்று சமநிலையில் இருந்தனர். பிறகு 5-8 என்று யாமாகுச்சியிடம் பின் தங்கியிருந்தார், அங்கிருந்து 5 புள்ளிகளை தன் அதிரடி ஆட்டத்தில் வென்று 11-9 என்று சிந்து முன்னேறினார். ஆனால் யாமகுச்சி விடுவாரா அவரும் தன் பங்குக்கு பிரமாத ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 புள்ளிகளை வரிசையாக வெல்ல இருவரும் 14-12 என்று யாமகுச்சி முன்னிலை பெற்றார், ஆனால் அதன் பிறகு பி.வி.சிந்து 5 புள்ளிகளை வரிசையாக எடுத்தார், யாமாகுச்சி சில தவறுகளை இழைத்ததால் 17-14 என்று சிந்து முன்னிலை வகித்தார். கடைசியில் இருவரும் கடும் சவாலாக ஆட பிவி.சிந்து 21-15 என்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

  2வது செட்டிலும் பிவி. சிந்துவின் கை ஓங்கியிருந்தது ஒரு கட்டத்தில் 11-5 என்று முன்னிலை பெற்றிருந்தார். அதன் பிறகு 15-12 என்று முன்னிலை பெற்றார்.பிறகு அருமையான ஒரு பரபரப்பான் ரேலியில் சிந்து அருமையான கிராஸ் கோட் ஷாட்டில் வெற்றி பெற 16-14 என்று சிந்துதான் முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன் பிறகு யாமக்குச்சி 3 புள்ளிகளை சடுதியில் பெற 16-17 என்று சிந்து பின்னடைவு கண்டார்.

  ஆனால் சிந்து விடவில்லை அடுத்த 2 புள்ளிகளை பெற்று 18-18 என்று இருவரும் சமநிலையில் இருந்தனர். பிறகு 18-20, 20-20 என்று இருவரும் சமநிலையில் இருந்த போது சிந்து ஒரு லோ சர்வுக்கு முயற்சி செய்ய அது தோல்வி அடைய யாமகுச்சி 22-20 என்று 2வது செட்டைக் கைப்பற்றினார்.

  3வது செட்டில் இருவரும் 4-4 என்று வழக்கம் போல் சமநிலை எய்தினர். பிறகு 7-7 என்று இருந்தனர், ஆனால் இருவருமே கடும் தவறுகளைச் செய்தனர். ஆனால் இதன் பிறகு வரிசையாகப் புள்ளிகளைப் பெற்ற சிந்து 11-7 என்று முன்னே சென்றார். 13-7-ல் சிந்து முன்னிலை பெற்றிருந்த போது சிந்து தளர்வான ஆட்டத்தை வெளிப்படுத்த 13-10 என்று நெருங்கினார் யாமகுச்சி.

  மேலும் இருவரும் சில தவறுகளையும் செய்து சில அருமையான ரேலிகளை ஆடியதில் சிந்து வெற்றி பெற்று 15-11 என்று முன்னிலை பெற்றார். ஆனால் அதன் பிறகு யாமகுச்சிக்கு சரிவர ஆட்டம் கைக்கொடுக்கவில்லை சிந்துவின் ஸ்மாஷ் ஷாட்கள் கைக்கொடுக்க 20-12 என்று நெருங்க முடியா உச்சம் சென்று கடைசியில் 21-13 என்று உலக நம்பர் 1 யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 51 நிமிடங்களில் வெற்றி கண்டார் பி.வி.சிந்து

  Published by:Muthukumar
  First published:

  Tags: Badminton, P.V.Sindhu, PV Sindhu