Home /News /sports /

வயது வெற்றிக்கு தடையல்ல ....சென்னை ஓபனில் பட்டையை கிளப்பும் இரண்டு குழந்தைகளின் தாய்...

வயது வெற்றிக்கு தடையல்ல ....சென்னை ஓபனில் பட்டையை கிளப்பும் இரண்டு குழந்தைகளின் தாய்...

தட்ஜானா மரியா

தட்ஜானா மரியா

தரவரிசையில் 69-வது இடத்தில் உள்ள மரியா, மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-வை 6-0, 6-1 என நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    வயது என்பது ஒரு எண் மட்டுமே  என்பது அடிக்கடி நிரூபிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக விளையாட்டு துறையில் சாதிக்க வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று இப்போது ஒரு டென்னிஸ் வீராங்கனை நிரூபித்துள்ளார்.

    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில், இரண்டு குழந்தைகளின் தாயான ஜெர்மனி வீராங்கனை தட்ஜானா மரியா, குடும்பமாக பங்கேற்று அசத்திவருகிறார். வயது என்றும் நம் வெற்றிக்குத் தடை இல்லை என்று விளையாட்டு உலகிற்கு எடுத்துரைத்துள்ள மரியாவின் டென்னிஸ் பயணம் குறித்து பார்ப்போம்.

    சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பெய்டு நடந்து முடிந்ததை அடுத்து இப்போது சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் தொடர் முதல் முறையாக களைகட்டி வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, அர்ஜெண்டினா என 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஜெர்மனியிலிருந்து 35 வயதான தட்ஜானா மரியாவும் ஒருவர்.

    தரவரிசையில் 69-வது இடத்தில் உள்ள மரியா, மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-வை 6-0, 6-1 என நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தியுள்ளார்.

    உலகின் முன்னணி விளம்பர நிறுவனத்தின் CEO-ஆன இந்தியாவின் தேவிகா புல்சந்தனி!

    35 வயதான மரியாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ஜெர்மனியிலிருந்து குடும்பத்துடன் சென்னை வந்த மரியா மைதானத்தில் தனது குழந்தைகளுடன் வலம்வருகிறார். ஆன்லைனில் பள்ளிப்படிப்பை மேற்கொண்டுவரும் அவரது குழந்தைகளுக்கு போட்டி இல்லாத நேரங்களில் சிறந்த தாயாகவும் திகழ்கிறார். மரியாவுக்கு அவரது கணவர் சார்லஸ், பயிற்சியாளராக இருந்து டென்னிஸ் விளையாட்டில் ஊக்கமளித்துவருகிறார்.

    மரியா தனது பேட்டியில் குழந்தை பிறந்த பின்பு டென்னிஸ் விளையாடும் முறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தேன், என்னுடைய கணவரும் பயிற்சியாளருமான சார்லஸ் தடுப்பாட்டத்தின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். என்னுடைய திறமையை முழுமையாக நம்பினார். அவருடைய முயற்சியால் தற்போது வெற்றி பெற்றுள்ளேன் என்று பெருமிதம் அடைகிறார் மரியா.

    வயது, குழந்தை என அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்த மரியாவின் டென்னிஸ் குடும்பம் அடுத்த தலைமுறை விளையாட்டு வீராங்கனைகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது .
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: Sports Player, Tennis

    அடுத்த செய்தி