டென்னிஸில் இருந்து சானியா மிர்ஸா ஓய்வுபெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயப் மாலிக்கை திருமணம் முடித்து தற்போது துபாயில் வசித்து வருகிறார். இருவரும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டியுடன் இந்த விளையாட்டில் இருந்து விடைபெறப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து மகளிர் டென்னிஸ் அசோசியேஷனின் இணைய தளத்தில் சானியா மிர்ஸாவின் பேட்டி வெளிவந்துள்ளது. அதில் ‘துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன்’ என்று சானியா கூறியுள்ளார்.
மகளிர் டென்னிஸ் தொடரின் ஒரு பகுதியாக துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அடுத்த மாதம் 19-ஆம் தேதி இந்த போட்டிகள் தொடங்கவுள்ளன. 36 வயதாகும் சானியா மிர்ஸா காயங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அவரது கணவர் ஷோயப் மாலிக் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் இந்த ஜோடி பிரியும் என்றும் சமீபத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இதுகுறித்து இருவரும் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
இந்நிலையில், அடுத்த மாதத்துடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்கிறார் சானியா மிர்ஸா.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரென்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை சானியா கைப்பற்றியுள்ளார்.
India vs Srilanka T20 : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது…
அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளையும் சானியாபெற்றுள்ளார். சானியா – ஷோயப் மாலிக் தம்பதிக்கு இஸ்கான் என்ற மகன் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sania Mirza