வாழைப்பழத் தோலை கூட உரிக்க முடியாதா..? சிறுமிக்காக வீரரை திட்டிய நடுவர் - வைரல் வீடியோ

வாழைப்பழத் தோலை கூட உரிக்க முடியாதா..? சிறுமிக்காக வீரரை திட்டிய நடுவர் - வைரல் வீடியோ
  • Share this:
டென்னிஸ் போட்டியின்போது பந்து எடுத்து கொடுக்கும் சிறுமியை வாழைப்பழத் தோலை உரித்துக் கொடுக்கக் கூறிய பிரெஞ்சு வீரரை நடுவர் சாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேயிலாவில் மெல்பர்ன் நகரில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆட்டத்தின் இடைவேளையின்போது பந்து எடுத்து கொடுக்கும் சிறுமி ஒருவர் வாழைப்பழத்தை கொண்டு வந்து பிரெஞ்சு வீரர் எலியட் பெஞ்செட்ரிட்டிடம் தருகிறார்.

அதை வாங்காமல் உரித்துத் தரும்படி எலியட் கூறுகிறார். இதை கவனித்த நடுவர் பிளாம்...தோலை நீங்களே உரித்துக் கொள்ளலாமே என சாடியுள்ளார்.  இதன் அந்த பழத்தை வாங்கி தானே தோலை உரித்துக் கொள்கிறார். இந்த வீடியோ காட்சி டென்னிஸ் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் நடுவரின் செயலை பாராட்டியும், எலியட்டை விமர்சித்தும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.


First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading