தோல்வியால் விரக்தியடைந்த டென்னிஸ் வீரர், பேட்டுகளை மைதானத்திலேயே அடித்து நொறுக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஃபிரான்சின் மோன்ட்பீலியர் நகரில் ஏடிபி டென்னிஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், புதன் அன்று நடந்த 32 ஆவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரர் அலெக்சான்டர் பப்ளிக், பிரான்ஸ் வீரர் ஐடோல் பரெரியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில முதல் செட்டை பரெரி 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் கவனமாக விளையாடிய பப்ளிக் 7-6 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றி கம்பேக் கொடுத்தார். இதனால் மூன்றாவது செட் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே பரெரியின் கை ஓங்கிய நிலையில், இந்த செட்டை பரெரி 7-6 என கைப்பற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
The TRIPLE 😳😳😳#OSDF23 @OpenSuddeFrance pic.twitter.com/vTsNeFVJcA
— Tennis TV (@TennisTV) February 8, 2023
இந்த போட்டிக்கு பின்னர் அப்செட்டாக காணப்பட்ட அலெக்சாண்டர் பப்ளிக் தான் விளையாடிய டென்னிஸ் பேட்டை மைதானத்திலேயே அடித்து நொறுக்கினார். அந்த மட்டை நன்றாக நொறுங்கியதைத் தொடர்ந்து தான் வைத்திருந்த மற்ற மட்டைகளை அடித்து உடைக்க தொடங்கினார். அந்த வகையில் மொத்தம் 3 பேட்டுகளை அலெக்சாண்டர் பப்பிள் உடைத்தெறிந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த ரசிகர்கள் மத்தியிலும் டென்னிஸ் உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tennis