Video : 'நீச்சல் ஜாம்பவான்' பெல்ப்ஸின் வரலாற்று சாதனையை முறியடித்த ஹங்கேரி இளம் வீரர்!

Vijay R | news18
Updated: July 25, 2019, 8:41 PM IST
Video : 'நீச்சல் ஜாம்பவான்' பெல்ப்ஸின் வரலாற்று சாதனையை முறியடித்த ஹங்கேரி இளம் வீரர்!
கிறிஸ்டோப் மிலாக்
Vijay R | news18
Updated: July 25, 2019, 8:41 PM IST
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீரர் 10 ஆண்டுகால சாதனையை ஹங்கேரி இளம் வீரர் கிறிஸ்டோப் மிலாக் முறியடித்துள்ளார்.

தென் கொரியாவின், குவாங்ஜூவில் உலக நீச்சல் சாம்பியன்ஷப் போட்டிகள் நடைபெற்ற வருகிறது. இதில் ஆடவர் 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் ஹங்கேரி இளம் வீரர் கிறிஸ்டோப் மிலாக் 1 நிமிடம் 50.73 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்குமுன் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் 2009ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற இந்த போட்டியில் 1 நிமிடம் 51.51 வினாடிகளில் இலக்கை அடைந்தார். கிறிஸ்டோப் மிலாக் 78 வினாடிகளுக்கு முன் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளார்.




Loading...



“நீச்சல் உலகின் ஜாம்பவானின் சாதனையை வென்றது மிகப் பெரிய மரியாதை உள்ளது. இலக்கை அடைந்த உடன் நான் திரும்பிய போது 1 நிமிடம் 50.73 வினாடிகளில் கடந்தை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். போட்டியின் மீதான அழத்தமும் பதற்றமும் அப்போது தான் முடிவுக்கு வந்தது“ என கிறிஸ்டோப் மிலாக் தெரிவித்தார்.

Also Watch

First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...