வெள்ளநீரில் 2.5 கி.மீ நீந்தி சென்று பதக்கம் வென்ற இளம்வீரர்!

Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 10:01 PM IST
வெள்ளநீரில் 2.5 கி.மீ நீந்தி சென்று பதக்கம் வென்ற இளம்வீரர்!
நிஷான் மனோகர்
Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 10:01 PM IST
கர்நாடகாவில் கனமழையில் சிக்கிய இளம்வீரர் வெள்ள நீரில் நீந்தி சென்று குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது. வெள்ள நீரில் மிகவும் பாதிக்கப்பட்ட பிலாகவி கிராமத்தை சேர்ந்தவர் குத்துசண்டை வீரர் நிஷான் மனோகர். 19 வயதான இவர் பெங்களூருவில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

நிஷான் மனோகர் போட்டியில் கலந்து கொள்ளவதற்காக இருந்த நிலையில் கிராமத்தை முற்றிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பெங்ககளூரு செல்வதற்கு ரயில்நிலையத்திற்கு நிசான் மனோகரும், அவரது தந்தையும் 2.5 கி.மீ வெள்ள நீரில் நீந்தி சென்றுள்ளனர். அவர்களுக்கு தேவையான பொருட்களை பிளாஸ்டிக் கவரில் வைத்து எடுத்து கொண்டு சென்றுள்ளனர்.

இயற்கை இன்னல்களை கடந்து குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்ட நிசான் வெள்ளிபதக்கம் வென்று அசத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்த குத்துசண்டை போட்டிக்காக நான் காத்திருந்தேன். இதை தவரவிட நான் சற்றும் விரும்பவில்லை. ரயில்நிலையம் வந்து சேர எந்த போக்குவரத்து வசதியில்லாததால் நீந்தி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முறை தங்கத்தை தவறவிட்டு விட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக தங்கம் வெல்வேன்” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...