மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 6வது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 12 வகையான எடை பிரிவில் இந்தியா முழுவதிலுமிருந்து 302 வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். இதில், 48 கிலோ எடை பிரிவில் தமிழக வீராங்கனை கலைவாணி, 2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றவரும், இந்தியன் ரயில்வே அணியை சேர்ந்தவருமான மஞ்சு ராணியை எதிர்கொண்டார். 3 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 0-5 என்ற கணக்கில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஏற்கனவே, 2 சர்வதேச போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள தமிழக வீராங்கனை கலைவாணி, வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீராங்கனைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.இந்நிலையில் டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்த கலைவாணி க்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் முனைவர் நாகராஜ் மற்றும் காஞ்சிபுரம் குத்துச்சண்டை கழகத் தலைவர் மோகன் பயிற்சியாளர்கள் லோக சந்திரன் சையது நஜீப் சார்பாக பூங்கெத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது தனது வெற்றியை பதக்கத்தை என்னுடைய தந்தை மற்றும் தமிழ்நாடு பாக்சிங் அசோசியேட்க்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boxing Day, Tamilnadu