ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

செஸ் சாம்பியன் தொடர்.. உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்..!

செஸ் சாம்பியன் தொடர்.. உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்..!

குகேஷ்

குகேஷ்

Chess champion | தனது 16 வயதில் கார்ல்சனை வீழ்த்தியதன் மூலம் குறைந்த வயதில் கார்ல்சனை விழ்த்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தகாரராகியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செஸ் சாம்பியன் தொடரில் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

  செஸ் சாம்பியன் தொடரானது 9 சுற்றுகளாக பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை ஆன்லைன் போட்டியாக நடைபெற்று வருகிறது.

  ஏற்கனவே 7 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது எட்டாவது தொடரான Aimchess Rapid போட்டிகள் அக்டோபர் 14 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

  இந்த தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணன், விதித், அதியா மிட்டல் ஆகிய ஐந்து வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

  ஒவ்வொரு வீரரும் மற்ற 15 வீரர்களுடன் ரவுண்ட் ராபின் முறையில் 15 சுற்றுகளில் மோதவேண்டும். அந்தவகையில் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் - உலக சாம்பியன் கார்ல்சனை எதிர்த்து மௌனயுத்தம் நடத்தினார்.

  ALSO READ | டி20 உலகக்கோப்பை தொடர் : யுஏஇ அணியிடம் போராடி வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி!

  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். ஏற்கனவே இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி ஏழாவது சுற்று ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்திய நிலையில் தற்போது மற்றொரு இந்திய வீரர் கார்ல்சனை தோற்கடித்து தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளார்.

  அத்துடன் தனது 16 வயதில் கார்ல்சனை வீழ்த்தியதன் மூலம் குறைந்த வயதில் கார்ல்சனை விழ்த்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தகாரராகியுள்ளார்.

  ஏற்கனவே முதல் மற்றும் நான்காவது தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. செஸ் சாம்பியன் தொடரில் மட்டும் மூன்று இந்திய வீரர்களிடம் வீழ்ந்துள்ளார் நடப்பு சாம்பியன் கார்ல்சன்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chess