• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பை- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக் கோப்பை- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து போட்டியிட்டன. அதில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதில், ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றன.

    அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டெவன் கான்வேக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக செய்ஃபெர்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

    இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இரண்டாது பேட்டிங் செய்பவர்களுக்கே மைதானம் சாதகமாக இருந்துள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்த அணியை வெற்றியும் பெற்றுள்ளது. எனவே, இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: