• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..

sushil kumar - ravi dahiya

sushil kumar - ravi dahiya

சுஷில் குமார் தான் 23 வயதாகும் ரவி தாஹியாவின் ரோல் மாடலாக இருந்திருக்கிறார். சுஷில் குமாருடன் சேர்ந்து தான் டெல்லியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தில் ரவி பயிற்சி பெற்றிருக்கிறார்.

  • Share this:
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றதை பார்த்த பின்னர், ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றவரும், ரவி தாஹியாவுக்கு முன் மாதிரியாக விளங்கியவருமான சுஷில் குமார், கொலை வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைபட்டிருக்கும் நிலையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டோக்யோ ஒலிம்பிக் போட்டித்தொடரின் மல்யுத்த விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம், சுஷில் குமாருக்கு பிறகு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரவி தாஹியா. ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் ஃபிரீ ஸ்டைல் பிரிவில் இறுதிப் போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் Zaur Uguev-விடம் 7-4 என்ற புள்ளிக்கணக்கில் ரவி தாஹியா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை சொந்தமாக்கினார்.

Also Read: தண்ணீர் என்றாலே அலர்ஜி.. இந்த 23 வயது பெண் குளிப்பது எப்படி?

டோக்யோ ஒலிம்பிக்கில் தனது முதல் ஒலிம்பிக் முயற்சியிலேயே தனது அபாரமான செயல்பாட்டின் மூலம் ஒரு ஹீரோவுக்கான அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ரவி தாஹியா.

குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் நுரிஸ்லாம் சனயேவ் உடனான போட்டியில் 9-2 என்ற புள்ளிகளில் பின் தங்கியிருந்த ரவி தாஹியா, கொஞ்சமும் சளைக்காமல் அந்த போட்டியின் போராடி, கடைசி ஒரு சில வினாடிகள் மீதமிருக்கையில் எதிராளியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப் போட்டியில் இரு முறை உலக சாம்பியனுடனான போட்டியிலும் கூட அபாரமாகவே செயல்பட்டார் ரவி.

Also Read:  திருமணத்தை நிறுத்தி மணமகன் வீட்டாரை அடித்துவிரட்டிய பெண் வீட்டார்

ரவி தாஹியாவின் இறுதிப் போட்டியை திகார் சிறையில் இருந்தவாறே பிற கைதிகளுடன் சேர்ந்து கண்டு ரசித்த சுஷில் குமார், தனது சாதனை ரவி தாஹியா சமன் செய்திருப்பதை பார்த்தவுடன் மிகவும் உணர்ச்சிவசமாக காட்சியளித்ததாக சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த பிரிவில் முதல் முறையாக அதுவும் அதிகபட்சமாக வெள்ளிப்பதக்கத்தை 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வென்றவர் சுஷில் குமார். முன்னதாக அவர் 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார்.

Also Read:  அரசு உயர் அதிகாரி முகத்தில் மண்ணை எறிந்த ஜூனியர் பெண் அதிகாரி

சுஷில் குமார் தான் 23 வயதாகும் ரவி தாஹியாவின் ரோல் மாடலாக இருந்திருக்கிறார். சுஷில் குமாருடன் சேர்ந்து தான் டெல்லியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தில் ரவி பயிற்சி பெற்றிருக்கிறார். இருப்பினும் அதே சத்ரசால் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரர் ஒருவர் கொலையான வழக்கில் சிக்கி சுஷில் குமார் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வயதில் இளையவரான ரவி தாஹியா அடுத்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், சுஷில் போலவே தொடர்ந்து இரு ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: