Home /News /sports /

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் 3 பேர் கமிட்டி கலைப்பு- உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் 3 பேர் கமிட்டி கலைப்பு- உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம்.

உலகக் கால்பந்து கூட்டமைப்பு இந்திய கால்பந்தில் 3ம் தரப்பின தலையீடு இருக்கிறது என்று காரணம் காட்டி இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்தது, இதனையடுத்து மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்றம் தான் நியமித்த 3 பேர் நிர்வாகக் கமிட்டியை கலைத்து உத்தரவிட்டது .

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    உலகக் கால்பந்து கூட்டமைப்பு இந்திய கால்பந்தில் 3ம் தரப்பின தலையீடு இருக்கிறது என்று காரணம் காட்டி இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்தது, இதனையடுத்து மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்றம் தான் நியமித்த 3 பேர் நிர்வாகக் கமிட்டியை கலைத்து உத்தரவிட்டது .

    இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்காததால் அதன் தலைவராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை பதவியில் இருந்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. அத்துடன் இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் தேசிய விளையாட்டு கொள்கையின்படி இந்திய கால்பந்து சம்மேளன விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்து புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை வருகிற 28-ந் தேதி நடத்த நிர்வாக கமிட்டி ஏற்பாடு செய்து வந்தது. மாநில சங்க நிர்வாகிகளுடன், தலைசிறந்த முன்னாள் வீரர்கள் 36 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், முன்னாள் வீரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கியதால் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தில் 3-ம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதாகவும், மூன்றாம் தரப்பினர் செல்வாக்கு செலுத்துவது பிபா விதிமுறைகளை மீறிய தீவிர செயலாகும். இதனால் இந்திய கால்பந்து கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறது என்று 'பிபா'அறிவித்தது.

    இந்த தடை காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 7-வது யு-17 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அணி சர்வதேச போட்டி மற்றும் 'பிபா' வின் பயிற்சி உள்ளிட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

    இந்நிலைகளை விளக்கி உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனுவை அடுத்து உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டியை கலைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்திய கால்பந்துக்கு விதிக்கப்பட்ட தடையை பிபா திரும்பப் பெற வசதியாகவும் யு-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்தை இந்தியாவில் நடத்த வசதியுமாக சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகம் அதனிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: FIFA, Football, Supreme court

    அடுத்த செய்தி