மெஸ்ஸியை மீண்டும் பின்னுக்குத் தள்ளிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி!

Sunil Chhetri | கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி சுனில் சேத்ரி இரண்டாம் இடம் பிடித்தார்.

news18
Updated: July 8, 2019, 10:07 AM IST
மெஸ்ஸியை மீண்டும் பின்னுக்குத் தள்ளிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி!
சுனில் சேத்ரி
news18
Updated: July 8, 2019, 10:07 AM IST
தஜிகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி எட்டியுள்ளார்.

இந்தியா - தஜிகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்தது. 2-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. எனினும், இந்திய அணிக்காக 2 கோல்களை அடித்த கேப்டன் சுனில் சேத்ரி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 70 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் 68 கோல்களுடன் மெஸ்ஸி உள்ளார். முதலிடத்தில் உள்ள போர்ச்சுக்கல் அணி வீரர் ரொனால்டோ 88 கோல்கள் அடித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதன் முறையாக மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி சுனில் சேத்ரி இரண்டாம் இடம் பிடித்தார். ஆனால், அதற்குப் பின்னர் மெஸ்ஸி சில போட்டிகளில் விளையாடி கோல்கள் அடித்ததன் மூலம் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் மெஸ்ஸியை சுனில் சேத்ரி பின்னுக்குத்தள்ளியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மெஸ்ஸி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. மொத்தமே அவர் 2 கோல்களை மட்டுமே அடித்திருந்தார். இறுதியில் பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

உலகக்கோப்பை லீக் சுற்றுகள் முடிவில் அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்த டாப்-5 வீரர்கள்!

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...