• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Sunil Chhetri: லயோனல் மெஸ்ஸியின் சர்வதேச சாதனையை தகர்த்த இந்திய வீரர் சுனில் சேத்ரி!

Sunil Chhetri: லயோனல் மெஸ்ஸியின் சர்வதேச சாதனையை தகர்த்த இந்திய வீரர் சுனில் சேத்ரி!

சுனில் சேத்ரி

சுனில் சேத்ரி

இந்திய வீரர் சுனில் சேத்ரி இன்னும் ஒரு கோல் மட்டும் எடுத்தால் போதும், ஒட்டுமொத்த அளவில் அதிக  சர்வதேச கோல்கள் அடித்த வீரர்களின் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துவிடுவார்.

  • Share this:
சர்வதேச அளவில் சிறப்புவாய்ந்த வீரராக விளங்கும் லயோனல் மெஸ்ஸி படைத்திருக்கும் உலக சாதனையை தகர்த்து காலபந்தாட்டத்தில் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி.

"Captain Fantastic" என்று அன்புடன் அழைக்கப்படும் சுனில் சேத்ரி சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில், அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸியினை முந்தியிருக்கிறார். இதன் மூலம் அதிக கோல்கள் அடித்த சர்வதேச நடப்பு வீரர்கள் வரிசையில் அவர் 2ம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.

2022 ஃபிபா உலக கோப்பை மற்றும் 2023 AFC ஆசிய கோப்பை தொடர்களுக்கான தகுதிச் சுற்று போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து நேற்றிரவு இந்திய அணி ஆடிய போது, வியக்கத்தக்க வகையில் செயல்பட்டு இந்திய அணிக்காக 79வது நிமிடத்திலும், கூடுதல் நேரத்திலும் என இரண்டு கோல்கள் போட்டு, அதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்திய அணி ஃபிபா உலக கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற காரணமாக இருந்தார் கேப்டன் சுனில் சேத்ரி. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த இரண்டு கோல்களுமே சுனில் சேத்ரியுடையது தான்.

Also Read:   இந்த பழைய 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி!

இந்த இரண்டு கோல்களின் மூலம் உலக அளவில் அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 72 கோல்களுடன் 2ம் இடத்தில் இருந்த அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியை பின்னுக்குதள்ளிவிட்டு, சுனில் சேத்ரி (74 கோல்கள்) 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸியைக் காட்டிலும் இரண்டு கோல்கள் சுனில் சேத்ரி கூடுதலாக பெற்றிருக்கிறார்.

இந்த பட்டியலில் தற்போது போர்சுகல் நட்சத்திரன் கிறிஸ்டியனோ ரொனால்டோ (103 கோல்) முதலிடத்தில் உள்ளார்.

Also Read:    ‘அப்படி சொல்லாதடா ச்சாரி மனசெல்லாம் வலிக்கிறது’ - மஞ்சரேக்கருக்கு கவுண்டர் கொடுத்த அஸ்வின்

அதிக கோல் அடித்த நடப்பு டாப் 5 வீரர்கள்:

1. கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்சுகல்) - 103 கோல்
2. சுனில் சேத்ரி (இந்தியா) - 74 கோல்
3. அலி மப்ஹூத் (ஐக்கிய அரபு அமீரகம்) - 73 கோல்
4. லயோனல் மெஸ்ஸி (அர்ஜெண்டினா) - 72 கோல்
5. ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (போலாந்து) - 66 கோல்

ஒட்டுமொத்த அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஈரானைச் சேர்ந்த அலி தேய் (1993 - 2006) 109 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய வீரர் சுனில் சேத்ரி இன்னும் ஒரு கோல் மட்டும் எடுத்தால் போதும், ஒட்டுமொத்த அளவில் அதிக  சர்வதேச கோல்கள் அடித்த வீரர்களின் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துவிடுவார்.

சுனில் சேத்ரியை தவிர்த்து அதிக சர்வதேச கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலின் முதல் 100 மட்டுமல்ல முதல் 200 இடங்களுக்குள் கூட எந்தவொரு இந்திய வீரரும் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: