ஒரே போட்டியில் 10 கோல்கள்... போலந்தை பந்தாடிய இந்தியா!

#SultanAzlanShahCup: India mauls Poland 10-0, to face Korea in final | 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

news18
Updated: March 29, 2019, 7:55 PM IST
ஒரே போட்டியில் 10 கோல்கள்... போலந்தை பந்தாடிய இந்தியா!
இந்திய ஆடவர் ஹாக்கி.
news18
Updated: March 29, 2019, 7:55 PM IST
மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் போலந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 10-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மலேசியாவின் இபோ நகரில் சுல்தான் அஸ்லான் ஷா சர்வதேச ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி களமிறங்கியது.  5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

India vs Poland
மைதானத்தில் களமிறங்கும் போலந்து - இந்தியா ஹாக்கி அணிகள்.


மன்ப்ரீத் சிங்கிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், சுரேந்தர் குமார் தலைமையில் இந்திய அணி இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே ஆக்ரோசமாக விளையாடிய இந்திய வீரர்கள், முதல் பாதி முடிவிலேயே 6 கோல்களை அடித்து அசத்தினர்.அடுத்த 30 நிமிடங்களில் போலந்தின் தடுப்பு அரண்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த இந்திய வீரர்கள் மேலும் 4 கோல்களை அடித்தனர். கடைசி வரை போலந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 10-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது.5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 வெற்றி, ஒரு டிரா உடன் 13 புள்ளிகள் பெற்றது. இதனையடுத்து, நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் தென்கொரியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

PHOTOS: சென்னை அணி வீரர்களின் புதிய அவதாரங்கள்!

யூசுஃப் பதான் வைத்த கிராண்ட் டின்னர்... தடபுடல் விருந்தால் அசந்துபோன ஹைதராபாத் வீரர்கள்...!

இன்றுடன் முடிகிறது தடைக்காலம்... உலகக்கோப்பையில் ஸ்மித், வார்னருக்கு இடம் கிடைக்குமா?

#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!

வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

Also Watch...First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...