இந்தியாவின் மூத்த ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜீஷ் திங்களன்று தனது 2021 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க உலக விளையாட்டு தடகள வீரருக்கான விருதை வென்றார், இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் ஆனார்.
2020 ஆம் ஆண்டில், இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் 2019 ஆம் ஆண்டில் தனது சிறந்த ஆட்டத்திற்காக இந்த மதிப்பு மிக்க உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்ற முதல் இந்தியர் ஆனார். தற்போது இதே விருதை வென்று ஸ்ரீஜேஷ் சாதனை புரிந்த 2வது வீரர் ஆனார்.
“இந்த விருதை வென்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். முதலில், இந்த விருதுக்கு என்னை பரிந்துரைத்த FIH-க்கு ஒரு பெரிய நன்றி, இரண்டாவதாக எனக்கு வாக்களித்த உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய ஹாக்கி பிரியர்களுக்கும் நன்றி" என்று ஸ்ரீஜேஷ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் ஒருவருமான ஸ்ரீஜேஷ் 1,27,647 வாக்குகள் பெற்றனர், அதேசமயம் லோபஸ் மற்றும் ஜியோர்டேன் முறையே 67,428 மற்றும் 52,046 வாக்குகள் பெற்றனர்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தால் (FIH) பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியர் ஸ்ரீஜேஷ் ஆவார்.
Also Read: வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம்: விவசாய அமைப்புகள் அறிவிப்பு
அக்டோபரில் நடந்த எஃப்ஐஎச் ஸ்டார்ஸ் விருதுகளில், 2021ஆம் ஆண்டின் சிறந்த கோல்கீப்பராக ஸ்ரீஜேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அபாரமான திறமையை வெளிப்படுத்தினார், குறிப்பாக வெண்கலப்பதக்கத்துக்கான அந்தப் போட்டியில் கடைசி விநாடியில் எதிரணியின் கோலைத் தடுத்தது மிகப்பெரிய தடுப்பாகும், ஆல்டைம் கிரேட் தடுப்பாகும் அது.
கிரிக்கெட்டே பிரதானம் என்று வாழும் நாட்டில் ஒரு ஹாக்கி வீரர், அதுவும் இந்திய தேசிய விளையாட்டில் உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வென்ற ஸ்ரீஜேஷைக் கொண்டாடத்தான் ஆளில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.