முகப்பு /செய்தி /விளையாட்டு / நாட்டிலேயே அதிக பரிசுத் தொகை... கேரளாவில் ஒலிம்பிக் மாரத்தான் போட்டி - சிறப்பம்சங்கள் என்ன?

நாட்டிலேயே அதிக பரிசுத் தொகை... கேரளாவில் ஒலிம்பிக் மாரத்தான் போட்டி - சிறப்பம்சங்கள் என்ன?

கேரள ஒலிம்பிக் மாரத்தான்

கேரள ஒலிம்பிக் மாரத்தான்

Kerala Olympic Marathon : முதல் கேரள ஒலிம்பிக் போட்டியை முதலமைச்சர் பினராயி விஜயன் ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

கேரளாவில் ஒலிம்பிக் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21.1 கி.மீ தூரம் அரை மாரத்தான் போட்டியும், 10 கி.மீ தூரம் ஓட்ட பந்தயமும் மே 1ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. முதல் கேரளா மாரத்தான் நாட்டிலேயே அதிக பரிசுத் தொகையுடன் மாநில அளவில் நடைபெறும் முதல் மாரத்தான் என்பது போட்டியின் சிறப்பு அம்சம்.

பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அரை மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். ரூ. 30,000 இரண்டாம் இடத்துக்கும், மூன்றாம் இடத்துக்கு ரூ. 20,000. நான்காம் இடத்துக்கு ரூ.15,000, ஐந்தாம் இடத்துக்கு ரூ.10,000, ஆறாம் இடத்துக்கு ரூ.5,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கான திறந்த (Open category) பிரிவு, மற்றும் 45 முதல் 55 வயதுக்குட்பட்டோருக்கான மூத்த பிரிவு (senior Category), 56 வயதுக்கு மேல் ஆன வெற்றிரன் பிரிவு என மூன்று பிரிவுகளாகப் பரிசுகள் பிரிக்கப்படும். 10 கி.மீ தூரம் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு ரூ.20,000. இரண்டாம் பரிசாக ரூ.15,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000, நான்காம் பரிசாக ரூ.5,000, ஐந்தாம் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும்.

முதல் கேரளா மாரத்தான் போட்டியில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் இப்போட்டியில் பங்கேற்க வரவுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் அரை மாரத்தான் போட்டி கேரள விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயமாக அமையும் என கேரள ஒலிம்பிக் சங்க மாநிலத் தலைவர் வி.சுனில்குமார் தெரிவித்தார். கேரளா ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக தலைநகருக்கு வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள், மூத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் ஆகியோரும் இந்த மாரத்தானில் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து கேரள ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜீவ் கூறுகையில், கேரளாவில் நடைபெறும் மிகப்பெரிய மாரத்தான் போட்டியாக கேரள ஒலிம்பிக் மாரத்தான் இருக்கும். மார்ச் 7ஆம் தேதி முதல் கேரளா ஒலிம்பிக் சங்க இணையதளத்தில் மராத்தான் போட்டிக்கு பதிவு செய்யலாம். ஏப்ரல் 15ல் முன் பதிவு முடிவடைகிறது.18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மட்டும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க முடியும்.

கேரள ஒலிம்பிக் மாரத்தான்

முதல் கேரள ஒலிம்பிக் போட்டியை முதல்வர் பினராயி விஜயன் ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இந்நிகச்சியில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், கேரள ஒலிம்பிக்கின் குட் வில் அம்பாசிடரும் பிரபல திரைப்பட நடிகருமான பத்மஸ்ரீ மோகன்லால், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் டாக்டர் நரேந்திர துருவா பந்த்ரா, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். முதல் கேரளா ஒலிம்பிக் மராத்தான் எஸ்.பி ஸ்போர்ட்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

Must Read : உடல் முழுவதும் சகதி பூசி கமுதியில் விநோத வழிபாடு... சேத்தாண்டி வேடமிட்டு ஆயிரக்கணக்கானோர் நடனம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் விழாவின் போது கவுரவிக்கப்படுவார்கள். நாட்டிலேயே மாநில அளவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது சிறப்பு அம்சம். மாவட்ட அளவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெற்றி பெறுபவர்கள் மாநில ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

First published:

Tags: Game, Kanyakumari, Kerala, Pinarayi vijayan