ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் தடகள வீரர்கள் - பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் தடகளத்தில் பதக்கம் வென்ற மூன்று பாகிஸ்தான் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் தடகள வீரர்கள் - பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு
ஊக்கமருந்து சோதனை
  • Share this:
13 வது தெற்காசிய விளையாட்டுப்போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேபாளில் நடத்தப்பட்டது.  இதில் நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,  மால்தீவ்ஸ், பூடான் என ஏழு நாட்டு வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் தடகளத்தில் இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் வென்ற மூன்று பாகிஸ்தான் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.  மேலும் அவர்கள் தடை செய்யப்பட்ட மருந்துகள் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களது பதக்கங்கள் பறிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் வரை தடைவிதிக்க வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் தடகள சங்கம் இதை உறுதிபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை விதியின் படி  அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் மறு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால் தண்டனை உறுதி எனவும் தெரிவித்துள்ளது.


இந்த போட்டியில் பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக 32 தங்கம் உட்பட 132 பதக்கங்களை கைப்பற்றி நான்காவது இடம் பிடித்தது. மூன்று நபர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading