மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நேற்று தென்னாப்ரிக்கா மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்கள் குவித்தார்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, இறுதி வரை வெற்றி பெற போராடியது. ஆனால், 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து மகளிர் அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, முதல் முறையாக டி20 உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் தொடரில் ஒரு முறை கூட தென் ஆப்பிரிக்கா உலககோப்பையில் வெற்றி பெறாத நிலையில், டி20 உலககோப்பை தொடரில் மகளிர் அணி இறுத்திபோட்டிக்கு முன்னேறியுள்ளதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
தென் ஆப்ரிக்கா சார்பில் அயபோங்கா 4 விக்கெட்களும், ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்களும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்ரிக்கா அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு, மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AusvsSA, ICC Women’s World T20, Live Cricket Score, South Africa, Women Cricket