ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்!

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னணி டென்னிஸ் வீராங்கனை ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்!

சிமோனா ஹாலெப்

சிமோனா ஹாலெப்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது சிமோனா தனது மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுத்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inte, IndiaLondonLondonLondon

  டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ருமேனியா நாட்டை சேர்ந்த 31 வயதான சிமோனா 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்துள்ளார்.

  தரவரிசையில் தற்போது ஒன்பதாவது இடம் வகிக்கும் அவர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு நடத்தும் ஊக்கமருந்து பரிசோதனையில் சிமோனாவை தோல்வி அடைந்தை அடுத்து, அவரை உடனடியாக இடைநீக்கம் செய்து சர்வதேச டென்னிஸ் சங்கம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்போது தனது மாதிரிகளை சிமோனா  பரிசோதனைக்கு கொடுத்திருந்தார்.

  பரிசோதனையில் இவர் Roxadustat என்ற மருந்தை உட்கொண்டதும் இந்த மருந்து உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் அதிகம் சுரக்க துண்டுதல் செய்யும் என்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்த மருந்தானது சிறுநீரக பாதிப்பு கொண்டவர்கள் சிகிச்சைக்காக பயன்படுத்துவார்கள்.

  இதையும் படிங்க: இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சொல்வது என்ன?

  இந்நிலையில் தன் மீதான இந்த புகார் அதிர்ச்சியளிப்பதாக சிமோனா கூறியுள்ளார். "என் வாழ்நாளிலேயே மிகுந்த அதிர்ச்சிக்குரிய தினம் இது. தான் எந்த ஊக்கமருந்தையும் பயன்படுத்தவில்லை. இதை நிரூபிக்கும் வரை போராடுவேன். உண்மை விரைவில் வெளியே வரும்" என்று வீராங்கனை சிமோனா கூறியுள்ளார். டென்னிஸ்சின் மதிப்பு மிக்க பட்டங்களாக கருதப்படும் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய இரண்டு கிராண்ஸ்ட்லாம் பட்டங்களை வென்றவர் சிமோனா என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Sports, Sports Player, Tennis