டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருப்பவர் மல்யுத்த வீரரான ரவிக்குமார் தாஹியா. தனது முதல் ஒலிம்பிக்கிலேயே வெள்ளிப்பதக்கம் வென்ற இந்த 23 வயது வீரரை நாடே வியந்து போற்றியது. இருப்பினும் அந்த பதக்கத்தை அவர் சாதாரணமாக வெல்லவில்லை, குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் அவரை கஜகஸ்தான் வீரர் கடித்து விட அந்த வலியை பொறுத்துக்கொண்டே அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் ரவிக்குமார் தாஹியா.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி கஜகஸ்தானின் நுரிஸ்லாம் சனயேவை எதிர்த்து அரையிறுதிப் போட்டியில் விளையாடினார் ரவிக்குமார் தாஹியா. நுரிஸ்லாம் சாதாரண வீரர் கிடையாது, இரண்டு முறை உலக சாம்பியன். கடுமையான போட்டியை ரவிக்குமார் சந்திக்க வேண்டியிருந்தது, 9-2 என்ற புள்ளிகள் கணக்கில் ரவிக்குமார் பின் தங்கியிருந்தார்.
Also Read:
2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
இந்த போட்டியின் போது எதிராளியான நுரிஸ்லாம், வெல்லும் நிலையில் இருந்த போது திடீரென ரவிக்குமார் அவரை கிடுக்கிப்பிடி போட்டு மடக்கினார். அந்தப் பிடியில் இருந்த போது நுரிஸ்லாம் ரவிக்குமாரை கடித்துவிட்டார். அந்த வலியை அவர் பொறுத்துக்கொண்டே மன உறுதியுடன் வெற்றிக்காக போராடியிருக்கிறர் ரவி. எதிராளி கடித்துவிட்டார் என்பதற்காக அந்த வலியில் அவருடைய பிடியை தளர்த்தியிருந்தால் அரையிறுதியில் தோல்வியைத் தழுவியிருப்பார் ரவி, ஆனால் அவரது மன உறுதி அவருக்கு வெற்றியை வசப்படுத்தியது.
எதிராளியிடம் கடிவாங்கிய அனுபவம் குறித்து மனம் திறந்திருக்கும் ரவி தாஹியா, இதெல்லாம் மல்யுத்தத்தில் சாதாரணம். இது சின்ன விஷயம் தான். போட்டிக்கு பின்னர் நுரிஸ்லாம் கடித்ததற்காக மன்னிப்பு கேட்டார். அந்த கடி சம்பவத்தை நான் அங்கேயே விட்டுவிட்டேன், வலி இருக்கத்தான் செய்தது என அசால்ட்டாக சிரிக்கிறார் ரவி.
Also Read:
ரவி தாஹியாவின் ஒலிம்பிக் பதக்கத்தால் திகார் சிறையில் உணர்ச்சிவசப்பட்ட சுஷில் குமார்..
இருப்பினும் எதிராளி மீது தனிப்பட்ட கோவம் எதுவும் கிடையாது. அரையிறுதிப் போட்டி முடிந்த பின்னர் எடை பார்ப்பதற்காக நான் வந்தபோது நுரிஸ்லாம் அங்கு இருந்தார். கடித்ததற்காக சாரி பிரதர் என மன்னிப்பு கேட்டார். நான் சிரித்தவாறே அவருடன் கை குலுக்கினேன். எனக்கு வாழ்த்து கூறினார். இருவரும் கட்டியணைத்தோம். நான் எப்போதோ அதை மறந்துவிட்டேன் என்றார் ரவி தாஹியா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரவி தாஹியா எதிராளியின் கடியையும், அதன் மூலம் ஏற்பட்ட வலியையும் தாங்கியவாறே அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை வீரேந்தர் சேவக், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.