Home /News /sports /

Konica Layak | துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லாயக் தூக்கிட்டு தற்கொலை... 4 மாதங்களில் 4-வது வீராங்கனை உயிரிழப்பால் அதிர்ச்சி

Konica Layak | துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லாயக் தூக்கிட்டு தற்கொலை... 4 மாதங்களில் 4-வது வீராங்கனை உயிரிழப்பால் அதிர்ச்சி

கடந்த 4 மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் 4-வது துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் 4-வது துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் 4-வது துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    துப்பாக்கி சுடும் விராங்கனை கோனிகா லாயக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 4 மாதங்களில் உயிரிழக்கும் 4-வது துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    ஜார்க்கண்டை சேர்ந்த 26 வயதாகும் கோனிகா லாயக், தேசிய வீராங்கனையாக இருந்து வருகிறார். முன்பு துப்பாக்கி இல்லாத காரணத்தால் அதனை கடன் வாங்கி பயன்படுத்தி வந்தார். இதில் சிக்கல்கள் ஏற்படவே அவரால் 2 முறை தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

    இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பிரபல நடிகர் சோனு சூட், ரூ. 2.70 லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் துப்பாக்கியை கோனிகாவுக்கு பரிசாக அளித்தார்.

    தற்போது அவர் கொல்கத்தாவில் தங்கி, அர்ஜுனா விருதைப் பெற்றவரான ஜோய்தீப் கர்மாகரிடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் சீலிங் ஃபேனில் துணியை மாட்டி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையும் படிங்க : இதே தினத்தில் அன்று- இந்தியா 414 ரன்கள், இலங்கை 411- தோனி கேப்டன்சியில் அபார வெற்றி

    கடந்த 4 மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் 4-வது துப்பாக்கி சுடும் வீராங்கனை இவர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்பாக குஷாசீரத் கவுர் சாந்து, உனர்தீப் சிங் சோகல் மற்றும் நமன்வீர் சிங் பிரார் ஆகிய வீராங்கனைகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் அனைவரும் மாநில அளவில் வீராங்கனையாக இருப்பவர்கள்.
    துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் தொடர் தற்கொலை விவகாரம் விளையாட்டு துறையிலும், தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    முன்பு தன்னிடம் துப்பாக்கி இல்லாதது குறித்து, கோனிகா லாயக் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதனை சோனுசூட்டின் ட்விட்டர் கணக்கிற்கு டேக் செய்திருந்தார். அந்த பதிவில், தான் ஜார்க்கண்ட் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி மற்றும் தங்கம் வென்றுள்ளதாகவும், தனக்கு மாநில அரசு உதவி செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். அதன்பின்னர் அவருக்கு சோனு சூட் துப்பாக்கி வாங்கித் தந்திருந்த நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டிருந்தது.

    இதையும் படிங்க : கோலி-ரோகித் இடையே என்ன பிரச்சனை?- அசாருதீன் சொல்லலாமே’

    இதுகுறித்து அவரது பயிற்சியாளர் ஜோய்தீப் கூறுகையில், 'கோனிகா தற்கொலை செய்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 நாட்களாக அவர் சரியாக பயிற்சியில் கலந்து கொள்வதில்லை. இதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை. விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. எது அவரை தற்கொலைக்கு தள்ளியது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. ' என்றார்.

    இதையும் படிங்க : Vijay Hazare Trophy: காலிறுதியில் தமிழ்நாடு அணி
    Published by:Musthak
    First published:

    Tags: Shooting, Sonu sood

    அடுத்த செய்தி