பாராலிம்பிக்: தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை அவானி லெகாரா

பாராலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த அவானி லெகாரா

டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா 10 மீ ஏர் ரைபிளில் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.

 • Share this:
  டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா 10 மீ ஏர் ரைபிளில் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.

  பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவானி லெகாரா. இதோடு மட்டுமல்லாமல் உலக சாதனையையும் அவர் சமன் செய்து அசத்தியுள்ளார்.  அவானி லெகாராவுக்கு வயது 19 தான் ஆகிறது. இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையானார், இதோடு பாராலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: