நான்கு முறை F1 சாம்பியன் செபாஸ்டியன் வெட்டெல் ஓய்வு பெறுகிறார்
நான்கு முறை F1 சாம்பியன் செபாஸ்டியன் வெட்டெல் ஓய்வு பெறுகிறார்
செபாஸ்டியன் வெட்டெல்
35 வயதான கார் பந்தய ஜாம்பவானும் ஜெர்மனியைச் சேர்ந்த வீரருமான செபாஸ்டியன் வெட்டெல் 2022 ஃபார்முலா ஒன் சீசன் முடிவடையும் போது கார் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான கார் பந்தய ஜாம்பவானும் ஜெர்மனியைச் சேர்ந்த வீரருமான செபாஸ்டியன் வெட்டெல் 2022 ஃபார்முலா ஒன் சீசன் முடிவடையும் போது கார் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
2010 முதல் 2013 வரை ரெட்புல்லுக்காக ஓட்டிய செபாஸ்டியன் வெட்டெல் 4 முறை ஃபார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றார்.இவருக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் பெருவெள்ளம் உண்டு. எனவே இந்த அறிவிப்பு இவரது ரசிகர்களை சோகத்திலேயே ஆழ்த்தும்.
2007-ல் அறிமுகமான வெட்டெல் 4 முறை தொடர்ச்சியாக உலக சாம்பியன் ஆனார். இதில் முதல் சாம்பியன் பட்டம் பார்முலா ஒன்னின் இளம் சாம்பியன் என்ற பெருமையை அவருக்கு பெற்றுத் தந்தது.
இத்தாலியின் பெராரி டீமுடன் 6 சீசனக்ள் ஆடினார். இறுதியாக ஆஸ்டன் மார்ட்டினுக்காக ஓட்டுநராக இருப்பார். அனைத்து கால சிறந்த கார் பந்தய வீரர்கள் பட்டியலில் கிராண்ட் பிரீ வெற்றிகளில் 3ம் இடத்தில் உள்ளார் வெட்டெல், 53 கிராண்ட் பிரீகளை வென்றுள்ளார் வெட்டெல். லூயிஸ் ஹாமில்டன் மற்றும் மேதை ஷூமேக்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் வெட்டெல்.
தன் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டியிருப்பதால் இந்த ஆண்டுடன் ஓய்வு பெற முடிவெடுத்ததாக அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பார்முலா ஒன் சர்க்கிளில் ஆல் டைம் கிரேட்களில் ஒருவர் செபாஸ்டியன் வெட்டெல், இவரது பிரியாவிடை கிராண்டாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.