ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலக ஜூனியர் பேட்மிண்டன்.. வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் சங்கர் முத்துசாமி!

உலக ஜூனியர் பேட்மிண்டன்.. வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் சங்கர் முத்துசாமி!

சங்கர் முத்துசாமி

சங்கர் முத்துசாமி

கடந்த 14 ஆண்டுகளில் உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் விளையாடும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சங்கர் முத்துசாமி

 • 1 minute read
 • Last Updated :
 • internation, IndiaSpainSpain

  உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

  ஸ்பெயினில் நடைபெற்ற உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சீன தைபே வீரர் குவோ குவான் லின் (kuo kuan lin) உடன் பலபரிட்சை நடத்தினார் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், முதல் செட்டில் 14-21 என்ற கணக்கில் வெற்றியை தவறவிட்ட இவர், இரண்டாவது செட்டில், 20-22 என்ற கணக்கில், குவோ குவான் லின்னிடம் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கடந்த 14 ஆண்டுகளில் உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் விளையாடும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சங்கர்.

  இதையும் படிக்க : பிரெஞ்சு பேட்மிண்டன் தொடர்.. இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி!

  இதற்கு முன், அபர்ணா போபட் (1996), சாயினா நேவால் (2006 & 2008), சிறில் வர்மா (2015) ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதுவரை உலக ஜூனியர் பேட்மிண்டன் அரங்கில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

  இதற்கு முன் 2008யில் சாயினா நேவால் உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரில், தங்க பதக்கம் வென்றிர்ந்தா என்பது குறிப்பிடத்தக்கது.


  Published by:Raj Kumar
  First published:

  Tags: Badminton, Saina Nehwal, Spain, World Badminton Championship