பிரபல கிரிக்கெட் வீரர் மகனை மணக்கும் சானியா மிர்சா தங்கை!

பிரபல கிரிக்கெட் வீரர் மகனை மணக்கும் சானியா மிர்சா தங்கை!
  • Share this:
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை ஆனம் மிர்சா பிரபல இந்திய வீரரின் மகனை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக உள்ளவர் சானியா மிர்சா. இவரது தங்கை அனம் மிர்சா ஆடை வடிவமைப்பளராக உள்ளார்.

சானியா மிர்சா தங்கை ஆனம் மிர்சாவிற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் மகன் முகமது ஆசாதுதினுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த தகவலை சானியா மிர்ஷா டெல்லி டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சா அளித்த பேட்டியில், ''என் தங்கை விரைவில் லவ்லி பாய் ஒருவரை மணக்க உள்ளார். அவர் பெயர் ஆஷாத். அவர் வேறு யாருமல்ல கிரிக்கெட் வீரர் அசாரூதின் அவர்களின் மகன் தான். இந்த திருமணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்“ என்றுள்ளார்.

இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாகவே இவர் இருவருக்கும் காதல் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில் சானியா மிர்சா தற்போது அதனை உறுதி செய்துள்ளார்.Also Watch

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading