ஹோபர்ட் டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி சாம்பயின் பட்டம் வென்றனர்

ஹோபர்ட் டென்னிஸ் :  சானியா மிர்சா ஜோடி சாம்பயின் பட்டம் வென்றனர்
  • Share this:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஹோபர்ட் பெண்கள் இரட்டையர் டென்னிஸில் சானிய மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஹோபர்ட்  பெண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சானியா மிர்சா - உக்ரைனை சேர்ந்த கிச்செனோ நாடியா ஜோடி சீன வீராங்கனைகளான சாங் சுவாய் - பெங்க் சுவோ இணையை எதிர் கொண்டது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரேஷமாக விளையாடிய சானிய மிர்சா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.





குழந்தை பிறந்து 2 ஆண்டுகள் கழித்து களம் இறங்கிய முதல் தொடரிலேயே சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். காயம் மற்றும் குழந்தை பெற்றதால் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு சானியா மிர்சா சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading