முகப்பு /செய்தி /விளையாட்டு / டென்னிஸ் போட்டிகளிலிருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் சானியா மிர்ஸா…

டென்னிஸ் போட்டிகளிலிருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார் சானியா மிர்ஸா…

சானியா மிர்சா

சானியா மிர்சா

‘இந்தியாவுக்கு இன்னும் பல சானியாக்கள் தேவை. அவர்களை உருவாக்குவதற்காக நான் பணியாற்றுவேன்’

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார். இதையொட்டி, அவரது சொந்த ஊரான தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விழா நடத்தப்பட்டது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது கடைசி டென்னிஸ் போட்டியி சக நாட்டு வீரர் ரோஹன் போபன்னா, அமெரிக்காவின் பெதானி மாடக், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோருடன் இணைந்து சானியா விளையாடினார். இந்த போட்டியில் சானியா – போபன்னா இணை வெற்றி பெற்றது. சானியா விளையாடிய இந்த கடைசி போட்டியை மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு, தெலங்கானா அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், யுவராஜ் ஆகியோருடன் சானியாவின் குடும்பத்தினர் நேரில் கண்டு ரசித்தனர்.

36 வயதாகும் சானியா, இந்திய டென்னிஸின் முகமாக அறியப்படுகிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 6 முறை இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளார்.

அந்த வகையில் கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையாக சானியா மிர்சா உள்ளார். கடைசிப் போட்டிக்கு பின்னர் கண்ணீர் மல்க சானியா மிர்சா பேசியதாவது- இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடியதை கவுரவமாக கருதுகிறேன். நான் நினைத்ததை விட அதிகமாக சாதித்து விட்டேன். கடைசி போட்டியை உள்ளூரில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவுக்கு இன்னும் பல சானியாக்கள் தேவை. அவர்களை உருவாக்குவதற்காக நான் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Sania Mirza